அமீரகத்தில் மீண்டும் ஒரு விபத்து... இந்தியர்கள் உட்பட 13 பேர் பலியான பரிதாபம்
Indians among 13 killed in UAE bus truck accident: ஐக்கிய அரபு அமீரகத்தில் நிகழ்ந்த விபத்தொன்றில், இந்தியர்கள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை காலை, 41 பேருடன் பயணித்த பயணிகள் பேருந்து ஒன்று, Ras Al Khaimah என்னுமிடத்தில், பழுதாகி நின்றுகொண்டிருந்த ட்ரக் ஒன்றின் மீது மோதியதாக the Khaleej Times என்னும் ஊடகம் தெரிவித்துள்ளது.
13 பேர் பலி
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழக்க, பலர் காயமடைந்துள்ளார்கள். அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேலும் இருவர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை 13ஆகியுள்ளது.

உயிரிழந்தவர்களில் இந்தியர்களும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எத்தனை இந்தியர்கள் உயிரிழந்துள்ளார்கள், எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள துபாயிலுள்ள இந்திய தூதரகம், பாதிக்கப்பட்ட குடும்பங்களை தொடர்புகொண்டுவருவதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான உதவிகளை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.
விடயம் என்னவென்றால், இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 13ஆம் திகதிதான், அமீரகத்திலுள்ள Fujairah என்னுமிடத்தில் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியானார்கள்.
Deeply saddened by the tragic road accident in Ras Al Khamiah that claimed lives of several people, including Indian nationals. The Consulate has reached out to the bereaved families and is closely working with local authorities to provide all possible assistance and support. Our heartfelt condolences and prayers are with the grieving families during this difficult time. Further details are being ascertained. 24/7 Toll Free Helpline No: 800-46342 @MEAIndia @IndembAbuDhabi
— India in Dubai (@cgidubai) November 24, 2026
23 வாகனங்கள் மோதிக்கொண்ட அந்த விபத்தில், பலியான 14 பேரில் நான்கு பேரும், காயமடைந்த 30 பேரில் ஏழு பேரும் இந்தியர்கள் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.