விசா பெறுவதற்காக இந்தியர்கள் நால்வர் வெளிநாட்டில் நடத்திய நாடகம் அம்பலம்
சிகாகோவில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டு, அதனூடாக சிறப்பு விசா பெற முயன்றதாக குறிப்பிட்டு நான்கு இந்தியர்கள் உட்பட 6 பேர்கள் மீது பெடரல் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறப்பு U-visa
குறித்த கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம், அவர்களுக்கு அமெரிக்கா அரசாங்கம் சிறப்பு விசா அனுமதிக்கலாம் என்றே அந்த நபர்கள் இந்த கொள்ளை நாடகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் இந்தியர்களான பிகாபாய் படேல், நிலேஷ் படேல், ரவினாபென் படேல் மற்றும் ரஜினி குமார் படேல் ஆகிய நால்வரும் Parth Nayi மற்றும் Kewong Young ஆகிய இருவருடனும் சேர்ந்து கொள்ளை சம்பவம் ஒன்றை போலியாக நடத்தியுள்ளனர்.
இதனால் இவர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் சிறப்பு U-visa-வுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுவாக U-visa என்பது மன அல்லது உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளான சில குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விசாரணை அல்லது வழக்கு விசாரணையில் சட்ட அமலாக்க அல்லது அரசாங்க அதிகாரிகளுக்கு உதவியாக உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தற்போது இந்த விசாவை பெறுவதற்காக இந்தியர்கள் நால்வரும் சில ஆயிரம் டொலர்களை Nayi என்பவருக்கு அளித்து, கொள்ளை சம்பவத்தை உருவாக்கியுள்ளனர். அந்த நால்வரும் ஆயுதங்களுடன் கொள்ளையிடுவதாக நடித்துள்ளனர்.
5 ஆண்டுகள் வரையான சிறை
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் என நம்பப்படுபவர்கள் உள்ளூர் பொலிசாரை அணுகி, தாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும் தயார் என்பது தொடர்பில் ஆவணங்களை பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து அந்த ஆவணங்களுடன் U-visa-வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் விசாரணை முன்னெடுத்த அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, முழுமையான விசாரணையை முன்னெடுக்க, இவர்களின் நாடகம் அம்பலமாகியுள்ளது.
தற்போது இந்த 6 பேர்களும் 5 ஆண்டுகள் வரையான சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரவினாபென் படேல் என்பவருக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கலாம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |