கனடாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா? கவலை தெரிவித்துள்ள உயர் ஸ்தானிகர்
கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர், கனடாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா என்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் பாதுகாப்பாக உணரவில்லை
கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகரான தினேஷ் கே பட்நாயக், கனடாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்று கூறியுள்ளார்.
கனடா இதை ஒரு இந்தியப் பிரச்சினையாக பார்க்கக்கூடாது, அது கனடாவின் பிரச்சினை என்று கூறியுள்ள அவர், கனடாவில் இந்தப் பிரச்சினையை உருவாக்கும் கனேடியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
"Indians are not feeling safe in Canada. The High Commissioner of Canada in India doesn't need protection. But the Indian envoy in Canada needs protection!" says Ambassador Dinesh Patnaik pic.twitter.com/GNc8X2Qr4J
— Shashank Mattoo (@MattooShashank) October 20, 2025
இந்தியாவுக்கான கனடாவின் உயர் ஸ்தானிகருக்கு இந்தியாவில் பாதுகாப்பு அளிக்கத் தேவையில்லை. ஆனால், கனடாவிலிருக்கும் இந்திய உயர் ஸ்தானிகருக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
கனடாவிலிருந்து வெளியேற்றப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், பட்நாயக் கனடாவில் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.