பிரபல நடிகை அணிந்திருந்த நெக்லஸ்: இந்தியர்களை வருந்தச் செய்துள்ள விடயம்
சமீபத்தில் திரைப்பட வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகையான மார்கோட் ராபி அணிந்திருந்த நெக்லஸ் ஒன்று இந்தியர்களை வருந்தச் செய்துள்ளது.
வருத்தத்திற்கான காரணங்கள்
மார்கோட், முன்னர் பிரபல நடிகையான எலிசபெத் டெய்லருக்கு சொந்தமான தாஜ்மஹால் நெக்லஸை அணிதிருந்தார்.
margot robbie’s wearing elizabeth taylor's cartier necklace, gifted by richard burton for her 40th birthday, in 1972 pic.twitter.com/OUow0NL9r4
— ✭ (@badestoutfit) January 29, 2026
ஆம், அந்த நெக்லஸ் உண்மையில் இந்தியாவை ஆண்ட மன்னர் ஜஹாங்கீரால் அவரது மனைவியான நூர்ஜஹானுக்கு கொடுக்கப்பட்டது.

Credit : Getty images
அது பின்னர் ஜஹாங்கீரின் மகனான ஷாஜஹானுக்குக் கொடுக்கப்பட, அதை அவர் தன் மனைவியான மும்தாஜுக்குக் கொடுத்தார்.

மும்தாஜின் நினைவாகத்தான் ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டினார். ஆகவேதான் அந்த நெக்லஸ் தாஜ்மஹால் நெக்லஸ் என அழைக்கப்படுகிறது.
அந்த நெக்லஸில் நூர்ஜஹானின் பெயர் பட்டம் உட்பட பல விடயங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
பின்னர் அந்த நெக்லஸ் இந்தியாவிலிருந்து அமெரிக்காவைச் சென்றடைய, அதை நடிகர் ரிச்சர்ட் பர்ட்டன் 350,000 டொலர்களுக்கு வாங்கி எலிசபெத் டெய்லரின் 40 ஆவது பிறந்தநாளில் அவருக்கு பரிசாக வழங்கினாராம்.

பின்னர் அதை Cartier என்னும் நிறுவனம் 8.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
அதைத்தான் மார்கோட் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றிற்காக அணிந்துவந்துள்ளார்.
Credit : Getty images
விடயம் என்னவென்றால், அது ஒரு காலத்தில் எலிசபெத் டெய்லருக்கு சொந்தமானது என கூறியுள்ளார் மார்கோட்.
ஆனால், அவர் அந்த நெக்லஸை அணிந்திருப்பதைக் கண்ட இந்தியர்கள், மார்கோட்டுக்கு அதன் வரலாறு தெரியவில்லை என்பதாலும், அது இந்தியாவுக்கு சொந்தமானது என்பதாலும் வருத்தமடைந்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |