இந்தியாவில் உள்ள Bank Account -யை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பயன்படுத்த முடியுமா?
இந்தியாவில் உள்ள வங்கிக் கணக்குகளை வெளிநாடுவாழ் இந்தியர்கள் பயன்படுத்தலாமா என்பது பற்றிய பதிவை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய வங்கிக் கணக்கு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற அந்தஸ்தை பெரும் இந்திய குடிமகன் எவரும் இந்திய வங்கிக்கணக்குகளை பயன்படுத்த முடியாது. அவர்கள், இந்தியாவில் உள்ள வங்கிக் கணக்குகளை நிதிப் பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்துவதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஏற்கனவே உள்ள ரிசர்வ் வங்கி விதியின்படி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்நாட்டு குடிமக்களை போல வங்கிக் கணக்குகளை பயன்படுத்த முடியாது.
அவர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குரிய என்.ஆர்.ஓ அக்கவுண்ட்டை பயன்படுத்த வேண்டும். இதில் தான் அவர்கள், நிதி பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும்.
சேமிப்பு கணக்கை பயன்படுத்தலாமா?
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்குளை பயன்படுத்துவது சட்ட விரோதம் ஆகும். அவர்கள், சட்ட விதிமுறைகளின் படி தங்களுடைய சேமிப்பு கணக்கை என்.ஆர்.ஓ கணக்காக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதாவது, நீங்கள் என்.ஆர்.ஓ தகுதி பெற்ற பிறகு இங்குள்ள சேமிப்புக் கணக்கை பயன்படுத்தக் கூடாது. அதை மீறினால் அபராதம் விதிக்க முடியும்.
என்.ஆர்.ஓ. கணக்கு (NRO Account)
என்.ஆர்.ஓ. கணக்கு என்பது ரூபாய் மதிப்பை கொண்டு இயங்கும் வங்கிக் கணக்கு ஆகும். அதாவது, ஒருவர் வெளிநாட்டில் இருந்தாலும், இந்தியாவில் கிடைக்கும் வருவாய் மேலாண்மை மற்றும் நிதி பரிவர்த்தனைகளை இந்த என்.ஆர்.ஓ. கணக்கு முலமாக செய்து கொள்ளலாம்.
என்.ஆர்.ஓ. கணக்கின் கீழ், சேமிப்புக் கணக்கு, கரண்ட் அக்கவுண்ட், பிக்ஸட் டெப்பாசிட் (FD), ரெக்கரிங் டெப்பாசிட் (RD) போன்ற கணக்குகளை தொடங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் வரும் வட்டி மற்றும் மற்ற வருமானத்திற்கு வரி பிடித்தம் செய்யப்படும்.
என்.ஆர்.ஓ. கணக்காக எப்படி மாற்றுவது?
* வெளிநாட்டில் நீங்கள் இருக்கும் முகவரி, தொடர்பு விவரங்கள், பாஸ்போர்ட், விசா விவரங்கள், ஓசிஐ / பிஐஓ அட்டை உள்பட புதிய இ-கேஒய்சி ஆகிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
* நீங்கள் ஜாயிண்ட் கணக்கு என்றால் அனைத்து கணக்குதாரர்களிடமும் கையெழுத்து வாங்க வேண்டும்.
* இந்திய தூதரகத்தால் சரிபார்க்கப்பட்ட ஆவணங்களை வங்கியில் கொடுக்க வேண்டும்.
* உங்களது விண்ணப்பம் கிடைத்த பிறகு, வங்கி அதனை பரிசீலனை செய்து என்.ஆர்.ஓ. கணக்காக மாற்றுவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |