பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 10 நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு பணப் பரிவர்த்தனை தொடர்பில் நற்செய்தி!
பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விரைவில் UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் விரைவில் தங்கள் சர்வதேச மொபைல் எண்களைப் பயன்படுத்தி UPI சேவைகளை அணுக முடியும்.
சிங்கப்பூர், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய 10 நாடுகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) அவர்களின் இந்திய ஃபோன் எண்ணைச் சார்ந்திருக்காமல் பரிவர்த்தனைகளுக்கான UPI சேவைகளை அணுகலாம்.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, சர்வதேச மொபைல் எண்களைக் கொண்ட NRE/NRO (Non Resident External and Non Residence Ordinary) போன்ற கணக்குகள் UPIஐப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யலாம்.
பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் கூட்டாளர் வங்கிகளுக்கு வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஏப்ரல் 30 வரை அவகாசம் அளித்துள்ளது.
NRE கணக்கு NRI-களுக்கு வெளிநாட்டு வருமானத்தை இந்தியாவிற்கு மாற்ற உதவுகிறது, அதே நேரத்தில் NRO கணக்கு இந்தியாவில் சம்பாதித்த வருமானத்தை நிர்வகிக்க உதவுகிறது.
பெரிய UPI நடவடிக்கை சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் வணிகங்களுக்கு உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்திட்டத்தின் கீழ், RuPay மற்றும் UPI ஆகியவற்றைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு நிதிச் சலுகைகள் வழங்கப்படும்.
இந்தியாவில், வெறும் ஆறு ஆண்டுகளில் UPI பரிவர்த்தனைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிசம்பரில், ரூ.12 லட்சம் கோடி மதிப்புள்ள UPI பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.