ஹைப்பர்சோனிக் ஏவுகணை களத்தில் இந்தியா முன்னேற்றம் - 12 புதிய ஏவுகணைகள் தயாரிப்பு
இந்தியா, உலகின் முன்னணி ஹைப்பர்சோனிக் ஏவுகணை சக்திகளில் ஒன்றாக மாறும் பாதையில் முன்னேற்றம் காண்கிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தற்போது Project Vishnu உள்ளிட்ட 12 புதிய ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்கி வருகிறது.
மொத்தமாக 12 வகையான ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் இந்திய இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைக்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதில் முக்கியமான ஒன்று ET-LDHCM (Extended Trajectory Long-Range Hypersonic Cruise Missile) ஆகும். இது Mach 8 வேகத்தில் பயணிக்கக்கூடியது.
இதன் தாக்குதல் தூரம் 2,500 கி.மீ. என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2030-க்குள் ஆயுதப்படையில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 நவம்பரில் DRDO நடத்திய ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை இந்தியாவின் Scramjet Engine மேம்பாட்டில் மிகப்பாரிய சாதனையாக இருந்தது.
இதன் மூலம், இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக மாறியுள்ளது.
இதனுடன், Hypersonic Glide Vehicle (HGV) உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் உருவாக்கப்படுகின்றன. இது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வைத்து வானில் செலுத்தப்பட்ட பின்பு, இலக்கை நோக்கி விழுந்து தாக்குகிறது. இதன் தாக்குதலை எதிரிகள் முன்பே கணிக்க முடியாது, காரணம் இது வழிமாற்றங்களை செய்யக்கூடிய திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும், BrahMos-II எனப்படும் ஹைப்பர்சோனிக் பதிப்பு Mach 7–8 வேகத்தில் பயணிக்கக்கூடியது. இது 1,500 கி.மீ. தூரம் தாக்கக்கூடியதாக இருக்கும். இது இந்தியா-ரஷ்யா இணைந்து செய்யும் முக்கிய திட்டமாகும்.
இத்துடன் இணைந்து, Project Kusa எனப்படும் ஹைப்பர்சோனிக் பாதுகாப்பு அமைப்பும் உருவாக்கப்படுகிறது. எதிரியின் ஹைப்பர்சோனிக் தாக்குதல்களுக்கு எதிராகவும் பாதுகாப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தியாவின் ஹைப்பர்சோனிக் ஆயுத திட்டம் 2030-க்குள் முழுமை பெறும் என திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவின் DF-17 மற்றும் பாகிஸ்தானின் Fatah-II ஆகிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கு பதிலடி கொடுக்க இது மிக முக்கியமாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |