144 ஏவுகணைகள், ஹைப்பர்சானிக் சக்தி கொண்ட இந்தியாவின் புதிய போர்கப்பல்
144 ஏவுகணைகள், ஹைப்பர்சானிக் சக்தி கொண்ட மிகப்பாரிய போர்கப்பல் இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கவுள்ளது.
உலகளாவிய யுத்தங்கள் மற்றும் வலுத்து வரும் பதட்டமான சூழல்களைக் கருத்தில் கொண்டு, இந்தியா தனது கடற்படை பலத்தை மேம்படுத்தும் முயற்சியில் மிகப்பாரிய போர்கப்பல் திட்டமான Project-18ஐ அறிவித்துள்ளது.
இது இந்தியா இதுவரை உருவாக்கிய மிகப்பாரிய மற்றும் சக்திவாய்ந்த போர்க்கப்பலாக அமையும்.
இந்த 13,000 டன் எடையுள்ள Stealth Destroyer கப்பல், தற்போதைய விசாகப்பட்டினம் வகை destroyer-ஐ விட மிகவும் மேம்பட்டதும் நவீன தொழில்நுட்பங்களை கொண்டதுமானதாக இருக்கும்.
Project-18 போர்கப்பல் அம்சங்கள்:
இதில் 144 vertical launch ஏவுகணை செல்கள் உள்ளன.
- 32 செல்கள் – ஏரியல் பாதுகாப்புக்கான PGLRSAM ஏவுகணைகள்
- 48 செல்கள் – நீண்ட தூரம் தாக்கும் BrahMos & Swadeshi ஏவுகணைகள்
- 64 செல்கள் – குறுகிய தூர பாதுகாப்புக்கான ஏவுகணைகள்
- 8 சாய்வு லாஞ்சர்கள் – BrahMos-2 ஹைப்பர்சானிக் ஏவுகணைகளுக்காக
மேலும், இந்த கப்பலில் 360 டிகிரி கண்காணிப்பு தரும் AESA ரேடார், மின்காந்த எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு முறைமைகள், ட்ரோன்கள், இரு ஹெலிகாப்டர்கள் மற்றும் முழுமையாக இணைக்கப்பட்ட மின்சக்தி இயக்கம் ஆகியவையும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
இந்த திட்டம் 'Make in India' இயக்கத்தின் கீழ் உருவாக்கப்படுவதால், சுமார் 75 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியாகும். MDL மற்றும் GRSE நிறுவனங்கள் உற்பத்தியை மேற்பார்வை செய்யும்.
இந்த Project-18 கப்பல்கள், 2035க்குள் 170-க்கும் மேற்பட்ட போர்கப்பல்கள் கொண்ட இந்திய கடற்படையின் இலக்கை பூர்த்திசெய்யும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Project-18 Indian Navy, India next-gen warship, Hypersonic BrahMos-2 missile, 144 missile destroyer India, Indian Navy stealth ship, Make in India warship, Indian Ocean naval power, India vs China maritime strategy, AESA radar warship India, Mazagon Dock GRSE Project-18