இந்தியாவின் 2025 இங்கிலாந்து சுற்றுப்பயணம்: அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ
இந்தியாவின் 2025 இங்கிலாந்து சுற்றுப்பயண அட்டவணை அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அதற்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று (ஆகஸ்ட் 22) வெளியிட்டது.
இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20 -ஆம் திகதி தொடங்குகிறது. இதன் மூலம், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) 2025-27 சுழற்சியைத் தொடங்கும்.
இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை விளையாடுகிறது.
ஜூன் 20 முதல் ஹெடிங்லியில் முதல் டெஸ்ட், ஜூலை 2 முதல் எட்ஜ்பாஸ்டனில் இரண்டாவது டெஸ்ட், ஜூலை 10 முதல் லார்ட்ஸில் மூன்றாவது டெஸ்ட், ஜூலை 23 முதல் ஓல்ட் டிராஃபோர்டில் நான்காவது டெஸ்ட், ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை லண்டனில் உள்ள தி ஓவலில் ஐந்தாவது டெஸ்ட் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய அணி கடைசியாக 2007-ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது.
ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் மற்றும் கடைசி போட்டி டிராவில் முடிந்தது. நாட்டிங்காமில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி 17 ஆண்டுகளாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் போனது. கடந்த சுற்றுப்பயணத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
கோவிட் காரணமாக தொடரின் கடைசி போட்டி மாற்றியமைக்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து அணி 2022-ம் ஆண்டு தொடரின் கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India's 2025 England Tour Schedule, BCCI Announcement, India vs England Five Match Test Series 2025