உலகின் டிஜிட்டல் ஹப்பாக மாறும் இந்தியா., கூகுள், அமேசான் பில்லியன்களில் முதலீடு
இந்தியா தற்போது உலகளவில் டேட்டா சென்டர் முதலீடுகளுக்கான முக்கிய தளமாக மாறியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு அதிகரிப்பதும், அரசின் டேட்டா உள்ளூர்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் சுயாட்சி கொள்கைகளும், இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளன.
சமீபத்திய பட்ஜெட்டில் 2047 வரை வரி சலுகை வழங்கப்பட்ட நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் ஈக்விட்டி நிறுவனங்களை இந்தியாவை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளன.

தற்போது இந்தியா உலகின் 20 சதவீத டேட்டாவை தன்னகத்தே வைத்திருப்பதால், AI வேலைப்பளு, கிளவுட் பயன்பாடு மற்றும் அரசின் ஆதரவு கொள்கைகள் இணைந்து, இந்தியாவை வேகமாக வளர்ந்து வரும் டேட்டா சென்டர் சந்தையாக மாற்றியுள்ளன.
அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற மாபெரும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவில் டேட்டா சென்டர் திறனை விரிவுபடுத்த 57 பில்லியன் டொலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
இதனுடன், உலகளாவிய தனியார் முதலீட்டு நிறுவனங்களும், உள்நாட்டு டேட்டா சென்டர் நிறுவனங்களில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து வருகின்றன.
2030-க்குள் இந்திய டேட்டா சென்டர் துறையில் 25 பில்லியன் டொலர் முதலீடு வரக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.
இந்த வளர்ச்சி, இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு 100 மில்லி விநாடி தூரத்தில் உள்ள டிஜிட்டல் ஹப்பாக மாற்றுகிறது.
500 கோடி பரிசு விழுந்த லொட்டரி சீட்டை குப்பையில் வீசிய கடைக்காரர்- அதிர்ஷ்டத்தை இழக்கவிருக்கும் பிரித்தானிய பெண்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |