2030-ல் EV உற்பத்தியில் ஜப்பான், கொரியாவை முந்தும் இந்தியா
மின்சார வாகன உற்பத்தியில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான், கொரியாவை இந்தியா முந்தும் என கூறப்படுகிறது.
இந்தியா, அடுத்த ஆண்டுகளில் ஜப்பான் மற்றும் கோரியாவை விஞ்சி உலகின் நான்காவது மிகப்பாரிய மின்சார வாகன (EV) உற்பத்தியாளராக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Rhodium Group என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் EV உற்பத்தி திறன் ஆண்டுக்கு 25 லட்சம் வாகனங்களாக உயரலாம்.
இது தற்போது உள்ள 2 லட்சம் வாகன உற்பத்தியை விட 10 மடங்கு அதிகம்.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக, இந்திய அரசு ன் Make In India திட்டத்தை ஊக்குவித்து, உற்பத்தி செலவுகளை குறைத்து சர்வதேச சந்தையில் போட்டியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
Tata மற்றும் Mahindra போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே EV சந்தையில் முன்னிலை வகிக்கின்றன.
இப்போது Maruti Suzuki தனது முதல் மின்சார SUV e-Vitara-வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வாகனம் முதலில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், பின்னர் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2030-ல் இந்தியாவில் மின்சார கார்களின் தேவை 4 லட்சம் முதல் 14 லட்சம் வரை இருக்குமென கணிக்கபப்டுகிறது.
ஆனால் உற்பத்தி திறன் 25 லட்சம் என்பதால், அதிகமான வாகனங்கள் ஏற்றுமதிக்கு தயாராகும். இது இந்தியாவை EV ஏற்றுமதியில் முக்கிய நாடாக மாற்றும். அனால், சீனாவுடன் போட்டியிட வேண்டுமானால் உற்பத்தி செலவுகளை வேலும் குறைக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India EV production 2030, Maruti Suzuki e-Vitara, electric SUV India export, Make in India electric cars, PM Modi EV launch, Suzuki Toyota EV platform, India vs China EV market, EV manufacturing in Gujarat, e-Vitara global launch, Aatmanirbhar Bharat EV push