இந்தியாவின் கருவுறுதல் விகிதம் சரிவு - ஐ.நா. அறிக்கையின் எச்சரிக்கை
இந்தியாவின் கருவுறுதல் விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) சரிவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதி முகமை (UNFPA) வெளியிட்டுள்ள 'The Real Fertility Crisis' என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, தற்போது இந்திய பெண்கள் சராசரியாக 1.9 குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்கின்றனர்.
இது, அடுத்த தலைமுறை மக்கள்தொகையை பராமரிக்க தேவையான 2.1 விகிதத்துடன் ஒப்பிடும்போது குறைவாகும்.
இந்த சரிவு எதிர்காலத்தில் இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சியை பாதிக்கக்கூடியதாக இருக்கலாம்.
தற்போது இந்தியாவில், உழைக்கும் வயதினரான 15 முதல் 64 வயதுக்குள் இருப்பவர்கள் 68 சதவீதம் பேர் உள்ளனர். 65 வயதுக்கு மேற்பட்டோர் 7 சதவீதமாக உள்ளனர்.
ஆயுள்காலம் அதிகரிப்பதால், முத்த குடிமக்கள் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025-ல் ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 71 ஆண்டுகள், பெண்களின் சராசரி ஆயுள்காலம் 74 ஆண்டுகள் என கணிக்கப்பட்டுள்ளது.
1970-ல் ஓர் பெண் சராசரியாக 5 குழந்தைகளை பெற்றிருந்தார். தற்போது அது இரண்டாக குறைந்துள்ளது. கல்வி மற்றும் மருத்துவ வசதிகளில் ஏற்பட்ட முன்னேற்றம், குழந்தை பிறப்பு விகிதத்தில் இந்த மாற்றத்திற்கு காரணமாகும்.
இருப்பினும் மாநிலங்கள், சமுகங்கள் மற்றும் வருமான நிலைகளுக்கு இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India fertility rate 2025, UNFPA fertility report India, declining birth rate India, India population trends, replacement fertility level, aging population India, demographic shift India, fertility crisis UN report, India reproductive health, Total Fertility Rate India