இந்தியாவின் முதல் தனியார் AI பல்கலைக்கழகம் உ.பி.யில் தொடக்கம்: மாதம் 1.5 லட்சம் பேருக்கு பயிற்சி
இந்தியாவின் முதல் தனியார் AI பல்கலைக்கழகம் உத்தரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவிலுள்ள இந்தியாவின் முதல் தனியார் செயற்கை நுண்ணறிவு (AI) பல்கலைக்கழகத்தை, முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த பல்கலைக்கழகம் சண்டிகர் யூனிவர்சிட்டியால் நிறுவப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், மாநிலம் முழுவதும் கல்வி, பாதுகாப்பு, வேளாண்மை, நிர்வாகம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் AI பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் செயல்படும்.
AI பிரஜ்ஞா (Pragya) திட்டத்தின் கீழ், அரசு 10 லட்சம் பேருக்கு AI, டேட்டா அனலிட்டிக்ஸ், மெஷின் லெர்னிங், சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இதில் இளைஞர்கள், ஆசிரியர்கள், கிராமத் தலைவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் அடங்குவர்.
இந்த பயிற்சிகள் Microsoft, Intel, Google, Guvi போன்ற முன்னணி நிறுவனங்களுடன் கூட்டாக வழங்கப்படுகின்றன. மாதத்திற்கு 1.5 லட்சம் பேர் பயிற்சி பெறுவது இலக்காக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு
Safe City திட்டத்தின் கீழ், 17 நகரங்களில் AI அடிப்படையிலான கண்காணிப்பு, SOS அலர்ட், முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயத்தில், World Bank ஆதரவுடன் செயல்படும் ரூ.4,000 கோடி மதிப்பிலான UP-AGRIS திட்டம், 10 லட்சம் விவசாயிகளுக்கு AI ஆதரவு தீர்வுகள் வழங்குகிறது.
மேலும், ‘Jarvis’ என்ற AI கண்காணிப்பு அமைப்பு 70 சிறைகளில், மற்றும் IoT கருவிகள் சுரங்க கண்காணிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
AI university in India, Private AI university Uttar Pradesh, Yogi Adityanath AI launch, AI Pragya scheme UP, AI training in India 2025, Microsoft Google AI training India, Safe City AI UP, UP AGRIS World Bank, Jarvis AI in Indian jails, AI land mapping UP