இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் Raptee.HV அறிமுகம்
இந்தியாவில் மின்சார வாகன துறையில் புதிய முன்னேற்றமாக, நாட்டின் முதல் உயர் மின்னழுத்த (High-Voltage) மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகமாகவுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மின்சார வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான Raptee.HV இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிளை இந்த மாத இறுதியில் வணிக ரீதியாக அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.
Raptee.HV-ன் நிறுவனர் மற்றும் CEO தினேஷ் அர்ஜுன், ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் சோதனைக்குப் பிறகு, Raptee.HV தனது வாடிக்கையாளர்களுக்கான வாகனங்களை வழங்கத் தயாராகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஊடக விமர்சனங்கள் அனைத்தும் நேர்மறையாக வந்துள்ளதால், இப்போது வணிக ரீதியாக வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய அம்சங்கள்:
இந்த பைக்கில் 240V drivetrain உள்ளது. அதவாது, பொதுவாக 48V–72V பயன்படுத்தும் ஸ்கூட்டர்களை விட அதிக சக்தி இதில் கிடைக்கும்.
இதன் விலை Flagship மாடலுக்கு ரூ.2.55 லட்சமாகவும், T-30 மாடலுக்கு ரூ.2.39 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, 250–300cc பெட்ரோல் பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.
செயல்திறனை பொறுத்தவரை, நீண்ட பயணத்திலும், மலைப்பகுதிகளிலும் அதிக வெப்பமின்றி இயங்கும் திறன் கொண்டுள்ளது.
இதில் fast சார்ஜிங் வசதி உள்ளது. வீட்டில் 1 மணி நேரத்திலும், Public fast charging-ல் 36 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.
CCS2 car-charging points-க்கு இணக்கமான ஒரே மோட்டார் சைக்கிள் இது தான்.
35,000-க்கும்மேற்பட்ட Public car chargers-ல் பயன்படுத்தும் வசதி இதில் உள்ளது. 70-க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Raptee.HV ஏற்கனவே 8,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் மாதத்திற்கு 300 யூனிட்கள் உற்பத்தி செய்து, 2025-ல் 2,000 பைக்குகள் வழங்க திட்டமிட்டுள்ளது.

முதற்கட்ட விநியோகம் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கோச்சி, புனே நகரங்களில் நடைபெறும்.
நிறுவனம், விற்பனைக்கு முன் சேவை மையங்களை அமைப்பதை முன்னுரிமையாகக் கொண்டுள்ளது. “முதல் ஆண்டில் மெதுவாக விரிவாக்கம் செய்து, வலுவான அடித்தளத்தை உருவாக்குவோம்” என CEO தெரிவித்துள்ளார்.
Raptee.HV-ன் அறிமுகம், இந்தியாவின் EV charging network விரிவாக்கத்துடன் இணைந்து, நீண்ட தூர பயணிகளுக்கான புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |