2026 முதல் தங்க ஏற்றுமதிக்கு 15 சதவீதம் வரி விதிக்கவுள்ள ஆசிய நாடு
ஆசிய நாடொன்று, 2026 முதல் தங்க ஏற்றுமதிக்கு 15 சதவீதம் வரி விதிக்கவுள்ளது.
இந்தோனேஷியா அரசு, 2026 முதல் தங்க ஏற்றுமதிக்கு 7.5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தோனேஷிய நிதியமைச்சகத்தின் பொருளாதாரத் திட்ட இயக்குநர் பெப்ரியோ காசரிபு (Febrio Kacaribu), “இந்த வரி கொள்கை தற்போது இறுதி நிலையில் உள்ளது. உள்நாட்டு செயலாக்கத்தை ஊக்குவிக்க, சுத்திகரிக்கப்பட்ட தங்கத்திற்கு குறைந்த வரி, ஆனால் சுத்திகரிக்கப்படாத தங்கக்கட்டிகளுக்கு அதிக வரி விதிக்கப்படும்” என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், உலக தங்க விலை அடிப்படையில் வரி விகிதம் மாறும் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக, விலை ஒரு அவுன்ஸுக்கு 3,200 டொலரை கடந்தால், சுரங்க நிறுவனங்களின் லாபத்தை (windfall profits) பிடிக்க அதிக வரி விதிக்கப்படும். தற்போது, தங்கம் அவுன்ஸுக்கு 4,000 டொலருக்கு மேல் விற்பனையாகி வருகிறது.
2025 ஜனவரி-செப்டம்பர் காலத்தில், இந்தோனேஷியாவின் தங்க ஏற்றுமதி 1.64 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இது, 2024 முழு ஆண்டின் 1.1 பில்லியன் டொலர் ஏற்றுமதியை விட அதிகம்.
இந்தோனேஷியாவிடமிருந்து தங்கம் வாங்கும் நாடுகளில் சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஹொங்ஹொங் ஆகியவை முன்னிலையில் உள்ளன.
இந்தோனேஷியா, உலகின் நான்காவது பெரிய தங்க கையிருப்பு கொண்ட நாடு. குறிப்பாக, Grasberg சுரங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதில் சிரமம் அனுபவிக்கின்றனர்.
பெப்ரியோ, “நாங்கள் உள்நாட்டில் போதுமான தங்க உற்பத்தி, பணப்புழக்கம் மற்றும் தங்கத்தின் புழக்கத்தை விரும்புகிறோம். தங்கத்தின் மதிப்பு அதிகரித்து, இந்தோனேஷியர்கள் நேரடியாக பயன் பெற வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும், இந்தோனேசிய அரசு நிலக்கரி ஏற்றுமதிக்கு வரி விதிப்பு குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indonesia gold export tax 2026 plan, Bebrizio Kacaribu gold tax policy, Indonesia gold dore bar higher levy, Indonesia refined gold lower tax rates, Indonesia windfall profits gold taxation, Global gold prices $4000 per ounce impact, Indonesia Grasberg mine gold exports, Singapore Switzerland Hong Kong gold buyers, Indonesia critical minerals tax strategy, Indonesia coal export tax consideration