சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்தியா உருவாக்கிவரும் Project Kusha பாதுகாப்பு அமைப்பு
எதிர்காலத்தில் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்தியா Project Kusha எனும் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை உருவாகிவருகிறது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமிருந்து வரும் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுவருகிறது.
சீனாவின் எல்லை விரிவாக்க நோக்கம் திபெத், சின்ஜியாங், மங்கோலியா பகுதிகளில் மட்டுமல்லாமல் தற்போது லடாக், அருணாச்சல பிரதேசம், தைவான், தென் சீன கடல் பகுதிகளிலும் தெரிவிக்கிறது.
மேலும், சீனா சதித்திட்டங்களுடன் பாகிஸ்தானை வலுப்படுத்தும் விதமாக, அதற்கு ஆயுதங்கள், ஏவுகணைகள், விமானங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறது.
இந்த சூழ்நிலையில், இந்தியா எதிர்காலத்தில் ஒரு பாரிய போரை எதிர்கொள்வதற்கான சாத்தியத்தை கணித்துள்ளளது. இதற்கான பதிலாக, இந்திய அரசு Project Kusha எனும் புதிய நீண்ட தூர ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வருகிறது.
Project Kusha திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
இந்த பாதுகாப்பு அமைப்பில் M1, M2, M3 என மூன்று இடைமறிப்பு ஏவுகணைகள் இருக்கும்.
M1 : 150 கி.மீ. வரம்பில் ட்ரோன்கள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஸ்டெல்த் விமானிகள் போன்ற குறுகிய தூர அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்.
M2 : 250 கி.மீ. வரம்பில் AWACS மற்றும் ASBM போன்ற இடைநிலை தூர அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்.
M3 : 350 முதல் 400 கி.மீ. வரம்பில் பாரிய விமானங்கள், SRBM மற்றும் IRBM ஏவுகணைகளை குறிவைக்கும்.
DRDO நிறுவனம் M1 interceptor ஏவுகணையை செப்டெம்பர் மாதத்தில் சோதிக்க திட்டமிட்டுள்ளது.
இது 100 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் உதிரிபாகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
500 கி.மீ. தூரத்திலிருந்து வரும் ஏவுகணை, ட்ரோன்கள், போர் விமானங்களை கண்டறிந்து அழிக்கும் திறனுடன் உருவாக்கப்படுகிறது.
இந்த ஏவுகணை அமைப்பு 80 முதல் 400 கி.மீ. வரையிலான அப்பாதுகாப்பது இடைவெளியை நிரப்பும்.
ரஷ்யாவின் S-500 திட்டத்துடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு உருவாக்கப்படவுள்ளது. சில அம்சங்கள் அதைவிட மேம்பட்டதாகவும் இருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Project Kusha, India missile defence system, DRDO interceptor missile, Long-range air defence India, Indian Air Force missile shield, M1 M2 M3 interceptor missiles, Indigenous missile technology India, India vs China defence, India vs Pakistan missile system, S-400 vs Project Kusha