இந்தியாவின் ட்ரோன், விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி: 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்
இந்தியாவின் ட்ரோன், விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவுள்ளது.
இந்தியாவின் விண்வெளி, ட்ரோன் மற்றும் ஏரோஸ்பேஸ் தொழில்துறை அடுத்த 8 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
Adecco India வெளியிட்ட தகவலின்படி, இந்த துறை 2033-க்குள் 44 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு விரிவடைந்து, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவுள்ளது.
முன்னதாக ஆராய்ச்சி சார்ந்த துறையாக இருந்த விண்வெளி தொழில்நுட்பம், தற்போது அரசாங்க சீர்திருத்தங்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மைகள் மூலம் முழுமையான தொழில்துறையாக மாறி வருகிறது.

புதிய வேலை வாய்ப்புகள் பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், Data Scientists, வணிக நிபுணர்கள் உள்ளிட்ட பல துறைகளில் உருவாகும்.
அதோடு, Space Policy Analysts, Robotics Engineers, Avionics Specialists, Guidance Navigation & Control (GNC) Experts போன்ற புதிய தலைமுறை பணியிடங்களும் அதிகரிக்கின்றன.
பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், புனே போன்ற நகரங்கள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மையங்களாக இருக்கும்.
குறிப்பாக, Avionics, Cryogenics, Remote Sensing, Space Habitat Engineering போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு 20 முதல் 30 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என அறிக்கை கூறுகிறது.
இந்த வளர்ச்சிக்கு Indian Space Policy 2023, 250-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள், மேலும் IN-SPACe மூலம் அறிவிக்கப்பட்ட ரூ.1,000 கோடி மதிப்பிலான Venture Capital நிதி ஆகியவை முக்கிய காரணங்களாகும்.
மேலும், WISE Fellowship, Vigyan Jyoti, ISRO YUVIKA, SAMRIDH Scheme போன்ற திட்டங்கள் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் விண்வெளி துறையில் ஈடுபடுகின்றனர்.
2033-க்குள், இந்தியா உலக விண்வெளி பொருளாதாரத்தில் 7 முதல் 8 சதவீதம் பங்கைக் கொண்டதாக உயர்ந்து, 11 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India drone industry growth 2033, India space-tech boom job creation, Adecco India aerospace jobs report, Indian Space Policy 2023 reforms, IN-SPACe VC fund Rs 1,000 crore, Bengaluru Hyderabad Chennai space hubs, Avionics cryogenics remote sensing jobs, ISRO YUVIKA Vigyan Jyoti WISE fellowship, Gaganyaan mission Axiom-4 ISS program