30,408 கோடி நிறுவனத்தின் தலைமையில் இருந்து விலகிய அனு ஆகா: அவரது மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?
தன்னுடைய அத்தனை பொறுப்புகளையும் மகளிடம் அளித்து விட்டு நிறுவனத்தை விட்டு வெளியேறியவரின் சொத்து மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாயாகும்.
நிறுவனத்தை செதுக்கிய பெண்
இந்தியாவில் எத்தனையோ பெண்கள் தங்களது திறமைகளால் மில்லியன் டொலர் மதிப்புள்ள தொழில் நிறுவனங்களை தொடங்கி தலைமை ஏற்று வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை வெற்றி பாதைக்கு கொண்டு சென்று, சுமார் 30,408 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளையும் தன்னுடைய மகள் மெஹர் புதும்ஜியின் கட்டுப்பாட்டில் மொத்த நிறுவனத்தையும் அக்டோபரில் வழங்கியுள்ளார் அனு ஆகா(Anu Aga).
உயிரிழந்தவர் திரும்பி வந்தால் அதிர்ச்சி: குடும்பத்தினருக்கு சாம்பல் கலசம், இறப்பு சான்றிதழ் அதிகாரிகள்
கணவர் உயிரிழந்ததை தொடர்ந்து எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனமான தெர்மாக்ஸை(Thermax) அனு ஆகா(Anu Aga) தலைமை தாங்கி முன் நகர்த்தினார்.
அத்துடன் இவர் சமூக பணியிலும் தன்னை ஆழ்த்திக் கொண்டார், இதற்காக இந்திய அரசின் பத்மஶ்ரீ விருதை பெற்றுள்ளார். மேலும் 2012ம் ஆண்டு ராஜ்யசபாவில் உறுப்பினராக நியமனம் பெற்றார்.
சொத்துமதிப்பு
Forbes வெளியிட்ட தகவல் படி, 2023 டிசம்பர் 4 திகதியில் அனு ஆகா-வின் நிகர சொத்து மதிப்பு சுமார் 20,000 கோடி என்பது தெரியவந்துள்ளது.
மும்பையில் உள்ள சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸில் ( Tata Institute of Social Sciences) மருத்துவம் மற்றும் மனநல சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
Hyundai-யின் 360 டிகிரி திரும்பும் IONIQ 5 மின்சார கார் அறிமுகம்: அசர வைக்கும் சிறப்பம்சங்களின் விவரம்
கடந்த 2004ம் ஆண்டு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகிய அனு ஆகா, 2018ம் ஆண்டு நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநராக குழுவில் இருந்தும் வெளியேறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |