இந்தியாவில் 4000 சதவீதம் அதிகரித்துள்ள பதப்படுத்தப்பட்ட உணவு விற்பனை - Lancet ஆய்வு எச்சரிக்கை
இந்தியாவில் Ultra-Processed Foods (UPFs) எனப்படும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விற்பனை கடந்த 13 ஆண்டுகளில் 4000 சதவீதம் அதிகரித்துள்ளது என Lancet வெளியிட்ட புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
2006-ஆம் ஆண்டில் ரூ.7,996 கோடி மதிப்பில் இருந்த UPF விற்பனை, 2019-ஆம் ஆண்டில் ரூ.3.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 40 மடங்கு அதிகரிப்பு.
இதே காலத்தில், இந்தியாவில் அதிக உடல் எடை (obesity) கொண்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பானது.
தற்போது, ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் அதிக உடல் எடையுடன், பத்து பேரில் ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

UPFs-ல் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பொட்டலம் செய்யப்பட்ட தின்பண்டங்கள், Ready-to-Eat உணவுகள், சக்கரை பானங்கள், பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் பாண்கள் (Mass Produced Breads), பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் போன்றவை அடங்கும்.
இவை சுவை, வசதி, விலை குறைவு காரணமாக பாரம்பரிய இந்திய உணவுகளை அழித்து வருகின்றன.
ஆய்வில், UPFs அதிகரிப்புக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் தீவிர விளம்பரங்கள், அரசின் பலவீனமான உணவு கட்டுப்பாடுகள் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
UPF உணவுகள் விளம்பரப்படுத்தப்பட்ட அடிமைத்தனங்கள் என்றும் அவற்றின் விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்களுக்கு தடை விதிக்கப்படவேண்டும் என PHFI பல்கலைக்கழகத்தின் சேன்சலர் ஸ்ரீநாத் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ நிபுணர்கள், UPF உணவுகளை உட்கொள்வது உடல் எடை அதிகரிப்பு, டைப்-2 சர்க்கரை நோய், இதய நோய், மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர்.
Lancet ஆய்வு, “தனிநபர் விருப்பம் மட்டும் போதாது; அரசியல் மற்றும் கொள்கை மட்டத்தில் உடனடி நடவடிக்கை அவசியம்” என வலியுறுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India ultra-processed food sales, Lancet study India obesity rise, 4000% growth processed food India, India diabetes and UPF consumption Indian households junk food trend, Corporate marketing processed foods, India public health nutrition crisis, Ultra-processed food health risks, India childhood obesity Lancet report, India food regulation and UPF growth