மன்னர் சார்லஸ் பெயரால் உறுதிமொழி எடுக்க மறுத்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்
மன்னர் சார்லஸ் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மறுப்பு.
கடவுள் மன்னரைக் காப்பாற்றட்டும் என்ற பாடலைப் பாடவும் அவர் மறுத்துவிட்டார்.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான Sol Mamakwa என்பவர், கனேடிய நாடாளுமன்றத்தில் மன்னர் சார்லஸ் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.
ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத்தில், கடந்த புதன்கிழமையன்று மன்னர் மூன்றாம் சார்லஸ் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
NDP கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Mamakwa, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டார்.
NEW - MPPs at Queen’s Park were given the option to re-take their oath of office in the name of King Charles III. Speeches are now being made by the main party leaders to honour the late Queen. Following this the legislature will adjourn for six weeks. pic.twitter.com/1Nab7VGBFr
— Richard Southern (@RichardCityNews) September 14, 2022
அதற்குக் காரணம், அவர் ஒரு பூர்வக்குடியினர். பூர்வக்குடியினருக்கும் ஆளும் மன்னர்களுக்குமிடையிலான உறவு சிக்கலானது என்கிறார் அவர். காலனி ஆதிக்கத்தின்போது பிரித்தானியர்களால் பூர்வக்குடியினர் நசுக்கப்பட்டதை நினைவுகூரும் அவர், உண்டுறை பள்ளிகளில் தங்கள் பிள்ளைகள் கொல்லப்பட்டதற்காக மன்னர் மன்னிப்புக் கேட்பது முதலான சில நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்கிறார்.
Mamakwa உறுதிமொழி எடுத்துக்கொள்ளாததுடன், அவரும் மற்றொரு NDP நாடாளுமன்ற உறுப்பினரான Guy Bourgouin என்பவரும், கடவுள் மன்னரைக் காப்பாற்றட்டும் என்ற பாடல் பாடப்படும்போது, அதிலும் பங்கேற்கவில்லை.
image - wikipedia