மாற்றுத்திறனாளி சிறுவனை அனுமதிக்க மறுத்த விமான அதிகாரி: சகிப்புத்தன்மை கூடாது என அமைச்சர் கண்டனம்
மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனை இந்தியாவின் IndiGo விமான நிறுவனம் அதிகாரி ஒருவர் பயணிக்க அனுமதி மறுத்ததை தொடர்ந்து, விமானநிறுவனத்தின் இந்த செயல் நாட்டில் பெரும் கண்டனத்தை பெற்று வருகிறது.
கடந்த சனிக்கிழமை இந்தியாவின் ராஞ்சி விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை இண்டிகோ விமான நிறுவனத்தின் ( IndiGo airline’s) அதிகாரி ஒருவர், அவர்களது விமான பயணித்திற்கு அனுமதி வழங்க மறுத்து வாக்குவாதம் செய்து இருப்பது பெரும் சர்ச்சையை எற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவமானது அந்த விமானத்தின் சக பயணி மனிஷா குப்தா வெளியிட்ட இணையதள பதிவின் முலம் பரவி இந்தியாவில் பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
Here is the video of the incident that happened at Ranchi airport where @IndiGo6E airlines denies boarding to a special need child along with his child.
— Dibyendu Mondal (@dibyendumondal) May 8, 2022
Seems lack of empathy from Indigo staff, not the first time though.
Indigo to issue a statement shortly. @JM_Scindia https://t.co/5ixUDZ009a pic.twitter.com/SyTNgAQIT6
அதில் ஹைதராபாத் பயணப்பதற்காக விமான நிலையத்திற்கு வந்த மாற்றுத்திறனாளி சிறுவன், விமான நிலையத்திற்கான தனது கார் பயணம் மற்றும் அடுத்தடுத்த விமான நிலைய பரிசோதனைகளால் மிகவும் பதற்றமடைந்து காணப்பட்டான்.
இதனைத் தொடர்ந்து சிறுவனை அவரது குடும்பம் அமைதி படுத்த முயற்சி செய்தனர், அப்போது அதனை கவனித்த விமான் நிறுவன அதிகாரி அவர்களை நோக்கி வந்து சிறுவன் அமைதி அடைந்து சதாரண நிலைக்கு வந்தால் தான் பயணத்திற்கு அனுமதிக்க முடியும் என காட்டமாக தெரிவித்தார்.
அந்த அதிகாரியின் அறிவிப்பு குடிபோதையில் பயணித்தவர்களை அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்து இருந்த்து எனவும் தெரிவித்துள்ளார்.
அவர்களது சகப்பயணிகளில் 4 மருத்துவர்கள் இருந்த நிலையிலும், பயணத்தின் போது எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த சிறுவனுக்கான உதவியை அந்த மருத்துவ பயணி தர தயாராக இருந்த நிலையிலும் சிறுவனை விமானத்தில் அனுமதிக்க அந்த அதிகாரி மறுப்பு தெரிவித்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து, இதற்கு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனம் எழுந்துள்ளது. இந்தநிலையில் இந்தியாவின் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்த சம்பவத்திற்கு பெரும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த நிகழ்வு தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ”இத்தகைய நடத்தைக்கு சிறிது சகிப்புத்தன்மை செலுத்தகூடாது மற்றும் எந்த மனிதனும் இதை கடந்து செல்ல வேண்டியதில்லை!” என்று திரு சிந்தியா ட்வீட் செய்துள்ளார்.
There is zero tolerance towards such behaviour. No human being should have to go through this! Investigating the matter by myself, post which appropriate action will be taken. https://t.co/GJkeQcQ9iW
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) May 9, 2022
இதையடுத்து இந்த கடினமான நிகழ்விற்கு மிகுந்த வருத்தும் தெரிவித்து கொள்வதாகவும், ஆனால் இத்தகைய சிக்கலான நிகழ்வுகளின் போது, சில கடினமான முடிவுகளை எடுக்க நேரிடுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மின்சார சக்கர நாற்காலியை பரிசாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.