இந்தியாவின் பெருமை: 20 ஆண்டுகள் நிறைவு செய்த IndiGo
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான IndiGo, தனது 20-வது ஆண்டு விழாவை இன்று (ஆகஸ்ட் 4, 2026) கொண்டாடுகிறது.
2006-ல் ஒரு Airbus A320 விமானத்துடன் டெல்லி-இம்பால் வழித்தடத்தில் தொடங்கிய இந்த நிறுவனம், இன்று 430-க்கும் மேற்பட்ட விமானங்கள், தினசரி 2,200 சேவைகள், 140-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்கள், 900 மில்லியன் பயணிகள் என மிகப்பெரிய வெற்றியை கொண்டுள்ளது.

வளர்ச்சி பயணம் குறைந்த கட்டணம், நேர்த்தியான சேவை, நேரத்தை கடைபிடித்தல், எளிய அனுபவம் ஆகியவை IndiGo வெற்றியின் ரகசியமாகும்.
இந்த நான்கு தூண்கள் கடந்த இருபது ஆண்டுகளாக மாறாமல் இருந்து, நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக மாற்றியுள்ளன.
முன்னாள் CEO Pieter Elbers தலைமையில், IndiGo சர்வதேச விரிவாக்கத்தைத் தொடங்கியது. தற்போது, Airbus A321XLR மற்றும் A350 widebody விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. 2030-க்குள் சர்வதேச சேவைகள் இண்டிகோவின் திறனில் 40 சதவீதத பங்கைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய CEO-வின் பார்வை புதிய CEO Willie Walsh, “IndiGo இந்தியாவை உலகளாவிய விமான மையமாக மாற்றும் திறன் கொண்டது. அடுத்த தசாப்தத்தில், சர்வதேச விரிவாக்கம், வாடிக்கையாளர் அனுபவ மேம்பாடு, உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பு
IndiGo தற்போது 68,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலைவாய்ப்பில் ஈடுபடுத்தியுள்ளது. iFly Academy வழியாக தினசரி 2,000 பேருக்கு பயிற்சி அளிக்கிறது. பெண் பணியாளர்கள் 45 சதவீதம் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட பெண் விமானிகள் உள்ளனர்.
எதிர்கால இலக்குகள்
இண்டிகோ நிறுவனம் 2030-க்குள், தினசரி 3,000 சேவைகள், ஆண்டுக்கு 200 மில்லியன் பயணிகள், 550-க்கும் மேற்பட்ட விமானங்கள், சர்வதேச விரிவாக்கத்தில் முன்னணி நிலையை எட்டுதல் ஆகிய இலக்குகளைக் கொண்டுள்ளது.
IndiGo, 2006-ல் ஒரு விமானத்துடன் தொடங்கிய பயணத்தை, 20 ஆண்டுகளில் இந்தியாவின் பெருமைமிகு விமான நிறுவனமாக மாறியுள்ளது. அடுத்த தசாப்தம், உலகளாவிய விமானத் துறையில் இந்தியாவின் முகமாக உருவாகும் இலக்கை நோக்கி நகர்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |