Indigo விவகாரம்... இன்று ஒரே நாளில் 1,000 விமானங்கள் ரத்தாகலாம்: நிர்வாகம் அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான Indigo, தங்களின் சேவைகளைத் திடீரென்று ரத்து செய்து வருவதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
சவால்கள் இருப்பதாக
வெள்ளிக்கிழமை மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகளை Indigo நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமையும் சுமார் 1000 விமான சேவைகள் ரத்தாகலாம் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indigo நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் டெல்லி, ஐதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய மையங்களில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் சவால்கள் இருப்பதாக கூறும் நிர்வாகம், தொழில்நுட்ப சிக்கல் மற்றும் காலநிலை, குளிர்காலத்தில் ஏற்படும் மாறுதல்கள் என காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது.
ஆனால், ஃபெடரல் அரசாங்கத்தின் புதிய விதியான Flight Duty Time Limitations (FDTL) என்பதை அமுலுக்குக் கொண்டுவருவதில் Indigo நிர்வாகத்திற்கு உடன்பாடில்லை என்றே தகவல் கசிந்துள்ளது.
இதனால், அரசாங்கத்தை ம்மறைமுகமாக நெருக்கடிக்குத் தள்ளும் ஒரு திட்டமாகவே, இந்த சேவை ரத்துகளை அரசியல் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள்.

சேவைகள் ரத்தாகும்
இந்த விதிகள் ஜனவரி 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் தற்போது வரை அமுல்படுத்தப்படவில்லை. சேவைகள் ரத்து செய்யப்படுவதற்கு Indigo நிர்வாகம் சார்பில் மன்னிப்பும் கோரப்பட்டுள்ளது.
Indigo நிர்வாக அதிகாரி Pieter Elbers வெளியிட்டுள்ள காணொளி அறிக்கை ஒன்றில், டிசம்பர் 10 முதல் டிசம்பர் 15 ஆம் திகதிக்குள் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை மிக மோசமாக பாதிக்கப்பட்டதாகவும், ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், இதனால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மனப்பூர்வமான மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியான சூழலில், தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மொத்த தொகையும் திருப்பி அளிக்கப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |