இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இணையத்தில் வேகமாக பரவும் காட்சி
இந்தோனேசியாவை 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.
இந்தோனேசியா நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சனிக்கிழமை காலை 5.58 மணிக்கு 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையமானது கிழக்கு நுசா தெங்காரா (East Nusa Tenggara) மாகாணத்தின் எண்டே (Ende) நகரின் வடமேற்கே 42 மைல் தொலைவில் அமைந்திருந்தது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசிய கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
BUILDINGS SWAY VIOLENTLY and CRUMBLE as 7.7 MONSTER QUAKE ROCKS INDONESIA https://t.co/qMl0QaNyzT pic.twitter.com/fvePye9AJo
— RT (@RT_com) August 14, 2026
அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிடம் ஒன்று இடிந்து விழும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதில், கட்டிடத்தின் கான்கிரீட் தளங்கள் இடிந்து விழுவதும், மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடுவதும் இடம்பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |