சீனாவின் J-10 போர் விமானத்தை வாங்க பரிசீலிக்கும் ஆசிய நாடு
சீனாவின் முன்னணி J-10 போர் விமானத்தை வாங்கும் வாய்ப்பை தற்போது இந்தோனேசியா பரிசீலித்து வருகிறது.
சீன விமானப்படையில் பரவலாக பயன்படுத்தப்படும் J-10 விமானம், சமீபத்திய யுத்த வெற்றிகளுக்குப் பிறகு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு
இந்தோனேசியாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் டொன்னி எர்மவான் டாஃபான்டோ, ஜகார்டாவில் நடந்த ஒரு பொதுக் கலந்தாய்வின் போது, சீனா J-10 விமானங்களை விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக Bloomberg மற்றும் Reuters செய்தியளித்துள்ளன.
இவையெல்லாம் ஆரம்பக்கட்ட பரிசீலனை மட்டுமே என அவர் கூறியுள்ளார். அதாவது, இந்நிலையில் எந்த தொழில்நுட்ப குழுவும் விமானங்களை நேரில் ஆய்வு செய்ய அனுப்பப்படவில்லை.

சீனாவின் J-10 மட்டுமல்லாமல் அமெரிக்காவின் F-15EX மற்றும் பிரான்சின் Rafale போர் விமானங்களும் இந்தோனேசியாவின் பரிசீலனையில் உள்ளன. ஆனால் விலை மற்றும் பிற ஆதரவுகள் முக்கிய முடிவெடுக்கும் காரணிகளாக இருக்கின்றன.
சீனாவின் J-10CE விமானம் சமீபத்தில் பாகிஸ்தான்-இந்தியா மோதலில் பல இந்திய விமானங்களை வீழ்த்தியதாக சீனாவின் CCTV கூறியுள்ளது. இந்த செய்தி இந்தோனேசியாவிற்கு முக்கிய கவனமாக இருக்கிறது.
“விலை சிறந்ததாகவும், செயல்திறன் நமக்கு ஏற்றதாகவும் இருந்தால் ஏன் வாங்கக்கூடாது?” என டாஃபான்டோ கூறுகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indonesia J-10 fighter jet, China Indonesia defense deal, J-10 vs Rafale vs F-15EX, J-10CE combat success, Indonesian Air Force upgrades, Indonesia China military ties, J-10 aircraft specifications, J-10 air-to-air combat, Langkawi LIMA 2025 J-10, Global Times J-10C review