இந்தோனேசியாவை சூறையாடிய மழை வெள்ளம்: 500-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை
இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்து 500 பேர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவை சூறையாடிய வெள்ளம்
இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக நாட்டின் முக்கிய 3 மாகாணங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உருவான அசாதாரணமான சூழ்நிலை காரணமாக இப்பகுதிகளில் அபரிமிதமான மழை கொட்டித் தீர்த்தது.

இந்தோனேசிய அரசின் பேரிடர் அமைப்பு தெரிவித்த தகவல் படி, பெருமழை பாதிப்பில் கிட்டத்தட்ட 14 லட்சம்(1.4 மில்லியன்) மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
அத்துடன் இந்த வெள்ள பாதிப்புகளில் சிக்கி சுமார் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து இருப்பதுடன், 500 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
இந்தோனேசியாவை போல ஆசிய நாடுகளான தாய்லாந்து, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் மோசமான வானிலை காரணமாக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |