இந்தோனேசியாவில் ஹெலிகாப்டர் விபத்து: 6 பயணிகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து
இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தன் மாகாணத்தின் மலைப்பகுதியில் நடந்த எதிர்பாராத ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மரங்கள் நிறைந்த காட்டு பகுதியில் இந்த ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வியாழக்கிழமை மெலவி பகுதியில் இருந்து புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே Matthew Air Nusantara நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் H130 ரக ஹெலிகாப்டரானது விபத்துக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பயணிகள் மற்றும் 2 ஊழியர்கள் என 8 பேர் வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |