பகலில் சாதாரண மனிதன், இரவில் பல்லி முகம் கொண்ட மனிதன்! இந்தோனேசியாவில் ஆச்சரியம்
இந்தோனேசியாவில் ஆண் ஒருவருக்கு காலையில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் மாறி மாறி தோன்றும் விசித்திர தன்மை உருவாகியுள்ளது.
மாறும் மனித முகம்
இந்தோனேசியாவில் முராங் என்பவரது குடும்ப கதை மிகவும் ஆச்சரியம் நிறைந்ததாக உள்ளது.

அதாவது முராங் குடும்பத்தின் உறுப்பினர்கள் பகலில் ஒரு முகத்துடனும், இரவில் மற்றொரு முகத்துடனும் வாழ்கின்றனர்.
உள்ளூர்வாசிகள் இவற்றை பல்லிகளின் முகங்கள் என்று கருதி வருகின்றனர்.
12 வயது ஏற்பட்ட விசித்திர மாற்றம்
இந்தோனேசியாவின் தொலைதூரப் பகுதியை சேர்ந்தவர் சூர்யா முராங் என்ற நபர் 12 வயது வரை சாதாரணமாக இருந்த நிலையில், அதன் பிறகு இந்த முகம் மாறும் விசித்திர மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பகல் நேரங்களில் சாதாரணமாகவும், இரவில் கண்கள் வீங்கி, தோல் இறுக்கமடைந்து, முகம் பல்லியைப் போல மாறத் தொடங்கி விடுகிறது.
காலை முழுவதும் சாதாரண மனிதரை போல இருக்கும் இவர் , இரவில் மட்டும் பல்லியின் முகத்தை கொண்டவர் போல் மாறிவிடுகிறார்.
இந்த விசித்திரமான மாற்றம் அவருக்கு மட்டுமல்லாமல், அவரது குழந்தைக்கும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |