திருமணம் குறித்து கேள்வியால் நச்சரித்த பக்கத்து வீட்டுக்காரர்: ஆத்திரத்தில் அடித்தே கொன்ற நபர்
திருமணம் செய்து கொள்ளாதது பற்றி தொடர்ந்து கேள்வி கேட்டதால், தனது 60 வயது பக்கத்து வீட்டுக்காரரை நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் இந்தோனேஷியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவின் தென் தபாநுலி, வடக்கு சுமத்ரா பகுதியை சேர்ந்த 45 வயதான பார்லிந்துங்கன் சிரேகர் (Parlindungan Siregar) என்ற நபர், தனது பக்கத்து வீட்டுக்காரரான 60 வயதானஅஸ்கிம் இரியன்டோவை(Asgim Irianto) ஜூலை 29 அன்று கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அஸ்கிம் இரியன்டோ தொடர்ந்து எழுப்பிய திருமணம் தொடர்பான கேள்விகளால் சிரேகர் மிகவும் எரிச்சலடைந்து வந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கோபத்தில் சிரேகர் மரக்கட்டையால் தாக்கியதில் அஸ்கிம் பலியானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரின் கோழிகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையே இந்த சம்பவத்திற்கு முதல் காரணம் என்றாலும், சிரேகர் தனது திருமண வாழ்க்கை குறித்த கேள்விகளால் தான் கோபமடைந்ததாகவும், அதனாலேயே கொலை செய்ததாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |