வெடித்துச் சிதறும் எரிமலை! தலைதெறிக்க ஓடும் மக்கள்: வைரலாகும் வீடியோக்கள்
இந்தோனேசியாவின் செமேரு எரிமலை வெடித்ததால், அச்சமடைந்த உள்ளூர்வாசிகள் பெரும் புகை மற்றும் சாம்பல் மேகத்திலிருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் Lumajang நகரத்தில் உள்ள செமரு எரிமலை (Semeru) உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வெடித்தது.
வெடிப்பு ஏற்பட்டதில் 40,000 அடி உயரத்திற்கு சாம்பல் எழுந்ததை அடுத்து, எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் (Volcanic Ash Advisory Center) எச்சரிக்கை விடுத்தது.
பெரிய சாம்பல் மேகங்கள் உச்சியில் இருந்து வருவதால், மலையடிவாரத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற தலைதெறிக்க ஓடும் காட்சிகள் ட்விட்டரில் வெளிவந்துள்ளன. புகை மூட்டத்தில் இருந்து மக்கள் தப்பிக்க முயலும் போது, பயத்தில் அலறல் சத்தம் வீடியோவில் கேட்கிறது.
BREAKING 🚨 Massive Mount Semeru eruption in Indonesia makes terrified locals flee pic.twitter.com/YgN6j6tkrg
— Insider Paper (@TheInsiderPaper) December 4, 2021
ஒரு புகைப்படத்தை ஆன்லைனில் பதிவிட்ட ஒருவர் கூறினார்: "நண்பர்களே, தயவுசெய்து எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள், என் குடும்பம் நன்றாக இருக்கிறது என்று நம்புகிறேன். இப்போது, அது உண்மையில் வெடிக்கிறது".
மற்றொருவர் , "செமரு மலைக்கு அருகில் வசிக்கும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்." “இந்த ட்வீட்டைப் படிக்கும் ஒவ்வொருவரும் தயவுசெய்து மலையின் அருகே வசிக்கும் அனைவரின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று மற்றொருவர் கூறினார்.
Image: @dinrayaujazla/Twitter
ஏற்கெனெவே இந்த ஆண்டு ஜனவரியில் செமரு மலை வெடித்தது, அதற்கும் முன்னதாக 2020 டிசம்பரில் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜாவா தீவில் உள்ள மிக உயரமான மலை மகாமேரு என்றும் அழைக்கப்படுகிறது, சமஸ்கிருதத்தில் "பெரிய மலை" என்று பொருள்.
இந்த எரிமலை வெடிப்பு ஜாவாவுக்கு மேலே 5.6 கிமீ உயரத்தில் சாம்பலைக் கொட்டியதாக பிபிசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image: @Lady_Zeebo/Twitter
Jembatan Gladak Perak penghubung
— Asumsi (@asumsico) December 4, 2021
Kab Malang ke Kab Lumajang dan sebaliknya putus, imbas lahar dingin erupsi Gunung Semeru hari ini, Sabtu (4/12/2021).pic.twitter.com/oxyrze6MYL

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022