இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமான சேவைகள் ரத்து
Indonesia's Anak Krakatau Volcano Erupts: இந்தோனேசியாவின் அனாக் கிரக்டாவ் எரிமலை வெடித்ததை அடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பு
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தோனேசியாவின் புகழ்பெற்ற அனாக் கிரகடாவ்(Anak Krakatau) எரிமலை வெடித்து சிதறியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிமலை வெடிப்பு காரணமாக வானத்தில் ராட்சத சாம்பல் மேகங்கள் உருவானதுடன், எரிமலை பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ஜகார்த்தாவின் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 209 விமானங்கள் எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து அமைச்சகத்தின் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் 22,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமத்ரா பகுதியில் 15,000 மீட்டர் உயரத்திலும், ஜாவா பகுதியில் 6000 மீட்டர் உயரத்திலும் சாம்பல் புகையானது எழும்பியுள்ளது.
சுகர்னோ - ஹத்தா சர்வதேச விமான நிலையம் எரிமலை வெடிப்பு காரணமாக காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |