காலனித்துவம் முதல் தமிழ் ஆளுமைகள் வரை: இந்தோனேசிய தமிழர்களின் முழு வரலாறு!

Tamils Indonesia
By Thiru Aug 18, 2024 08:37 AM GMT
Report

இந்தோனேசியாவில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் இந்தோனேசிய தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த இந்தோனேசிய தமிழர்கள் பெரும்பாலானோர் வடக்கு சுமத்ராவில் உள்ள மேடானில் வசித்து வருகின்றனர்.

மேலும் தமிழ் இந்தோனேசியர்களின் குறிப்பிடத்தக்க சிறிய சமூகம் ஜார்த்தா, ஆச்சே, ரியாவ் மற்றும் ரியாவ் தீவுகள் ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

காலனித்துவம் முதல் தமிழ் ஆளுமைகள் வரை: இந்தோனேசிய தமிழர்களின் முழு வரலாறு! | Indonesia Tamil History Population Details

 அந்த வகையில் தற்போது இந்தோனேசியாவில் 25,000 இந்திய வம்சாவளியினர்(PIOs) மற்றும் என்ஆர்ஐக்கள்(NRIs) வாழ்ந்து வருகின்றனர்.

காலனித்துவத்திற்கு முன்பு

தமிழர்களுக்கு இந்தோனேசியாவில் மிக நீண்ட வரலாறு உள்ளது, அதிலும் குறிப்பாக 1024-1025 வரையிலான காலக்கட்டத்தில் ஸ்ரீவிஜயப் பேரரசு மீது முதலாம் ராஜேந்திர சோழனின் போருக்கு பிறகு தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இந்தோனேசியா உட்பட தென்கிழக்கு ஆசியா முழுவதும் அதிகரித்தது.

சோழர்கள் படையெடுப்பின் நேரடி தாக்கமாக வடக்கு மேடானில் அமைந்துள்ள Kota Cina தோற்றம் பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழர்களின் வணிகர் சங்கமான அய்யனுருவாரின் 500 பிரபுக்கள் குறித்த Lobu Tua கல்வெட்டில் அவர்களின் இருப்பு 1088ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு தமிழில் எழுதப்பட்டுள்ளது.

காலனித்துவம் முதல் தமிழ் ஆளுமைகள் வரை: இந்தோனேசிய தமிழர்களின் முழு வரலாறு! | Indonesia Tamil History Population Details

சில வரலாற்று ஆசிரியர்கள்  இறந்தவர்களை அடக்கம் செய்வது மற்றும் கிராம கூட்டமைப்பு முறையான Karo பாரம்பரியத்தின் சில அம்சங்கள் தமிழ் கலாச்சாரத்தின் தாக்கம் பெற்று இருப்பதாக நம்புகிறார்கள்.

நாட்டை விட்டு வெளியேற சொந்த குடிமக்களுக்கு பணம் தரும் நாடு!

நாட்டை விட்டு வெளியேற சொந்த குடிமக்களுக்கு பணம் தரும் நாடு!

14ம் நூற்றாண்டை சேர்ந்த Suruaso கல்வெட்டு தமிழ் நாகரிகத்திற்கான இன்னொரு சான்றாக அமைந்துள்ளது.

தமிழ் மற்றும் மலாய் ஆகிய 2 மொழிகளில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டு தனா தாதார் ரீஜென்சியில் (Tanah Datar Regency) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டச்சு காலனித்துவம்

1830ம் ஆண்டு தோட்ட தொழில் கட்டமைப்பிற்காக இந்தியாவில் உள்ள தமிழர்கள் டச்சுக்காரர்களால் இந்தோனேசியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட தமிழர்கள் கடுமையான வேலைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், மேலும் சிறிய கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

காலனித்துவம் முதல் தமிழ் ஆளுமைகள் வரை: இந்தோனேசிய தமிழர்களின் முழு வரலாறு! | Indonesia Tamil History Population Details

அந்த காலக்கட்டத்தில் பெரும்பாலான தமிழர்கள் டச்சு கம்பெனியான Deli Maatschappij-யில் வேலை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

வேலை ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு 1940ம் ஆண்டில் பெரும்பாலான தமிழர்கள் இந்தியாவுக்கு திரும்பினர், ஆனால் 5000 முதல் 10,000 வரையிலான தமிழர்கள் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் குறிப்பாக மேடானில் தங்கினர். 

சுதந்திரம் மற்றும் 2ம் உலகப் போரின் தாக்கம்

இரண்டாம் உலக போர் மேலும் டச்சுக்காரர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு தமிழர்கள்  அவர்களின் தோட்டங்களில் இருந்து வெளியேறினர்.

காலனித்துவம் முதல் தமிழ் ஆளுமைகள் வரை: இந்தோனேசிய தமிழர்களின் முழு வரலாறு! | Indonesia Tamil History Population Details

இவ்வாறு வெளியேறிய தமிழர்கள், மசாலா வர்த்தகம், கட்டுமான தொழில், மற்றும் மாட்டு வண்டிகள் மற்றும் போரில் கைவிடப்பட்ட ஜப்பானிய இராணுவ வாகனங்கள் மூலம் மணல் மற்றும் கற்களை எடுத்து செல்லும் போக்குவரத்துகளில் ஈடுபட்டனர்.

வடக்கு சுமத்ராவில் உள்ள பிற இனக்குழுவுடன் இந்தோனேசிய தமிழர்கள் இணக்கமான உறவை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் சங்கங்கள்

2011ம் ஆண்டு ஆகஸ்ட்டில் 400க்கும் மேற்பட்ட இந்தோனேசிய தமிழர்கள்  ஜகார்த்தாவில் ஒன்று கூடி  இந்தோனேசிய தமிழ் சங்கம் என்ற புதிய சங்கத்தை உருவாக்கினர்.

இந்தோனேசியாவில் தமிழ் மொழி அடைப்படையிலான சங்கங்களுடன் சேர்த்து மத அடிப்படையிலான தமிழ் அமைப்புகளும் உள்ளன.

ஆதி திராவிட சபா,  மூட-முடி புத்தர் தமிழ், தென்னிந்திய முஸ்லீம் அறக்கட்டளை, ஶ்ரீ மாரியம்மன் கோவில் சங்கம் ஆகியவை இவற்றில் உள்ளடங்கும்.

காலனித்துவம் முதல் தமிழ் ஆளுமைகள் வரை: இந்தோனேசிய தமிழர்களின் முழு வரலாறு! | Indonesia Tamil History Population Details

மக்கள் தொகை

1930ல் இந்தோனேசியாவில் 18,000 தமிழர்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்ட நிலையில், 1996ல் இந்தோனேசியாவில் 75,000 தமிழர்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மதங்களின் அடிப்படையில் பார்க்கையில், மொத்த தமிழர்களில் 78% பேர் இந்துக்கள், 11% பேர் பெளத்தர்கள், 5.5% பேர் முஸ்லிம்கள் மற்றும் 4.5% பேர் கிறிஸ்தவர்கள்.

சிங்கப்பூர் தமிழர்களின் வரலாறு! அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் ஆளுமை

சிங்கப்பூர் தமிழர்களின் வரலாறு! அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் ஆளுமை

குறிப்பிடத்தக்க இந்தோனேசிய தமிழர்கள்

இந்தோனேசிய அரசியல்வாதி சார்லஸ் தம்பு, இந்தோனேசிய தமிழ் சமூக தலைவர் டி குமாரசாமி, நடிகை மற்றும் பாடகியான கிம்மி ஜெயந்தி ஆகியோர்  குறிப்பிடத்தக்க இந்தோனேசிய தமிழர்கள் ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US