இந்தோனேஷியா பயணிகள் கப்பலில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு: 41 பேரை காணவில்லை
இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
பயணிகள் கப்பலில் தீ விபத்து
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பலில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் வரை பலியாகியுள்ளனர்.
கிட்டத்தட்ட 41 பேரின் நிலைமை இதுவரை என்னவென்று தெரியவில்லை.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
முடியரா செந்தோசா 2(Mutiara Sentosa 2) என்ற பெயர் கொண்ட இந்த கப்பலில், விபத்தின் போது பயணிகள், பணியாளர்கள் என கிட்டத்தட்ட 271 பேர் பயணம் செய்துள்ளனர்.
விபத்தில் சிக்கியுள்ள இந்த கப்பல், கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுராபாயாவில் இருந்து தெற்கு சுலாவசியில் உள்ள மகாசக்கர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மீட்பு பணிகள் தீவிரம்

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர கால மீட்பு படையினர் மற்றும் அருகிலிருந்த கப்பல்கள் என அனைவரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குள் 225 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்த 5 பேரின் உடலையும் கப்பலில் இருந்து மீட்டெடுத்துள்ளனர். காணாமல் போயுள்ள 41 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதே சமயம் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான உண்மையை கண்டறிய விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |