மோசமான வானிலையில் சிக்கிய இந்தோனேசியப் படகு... 140 பேர்களைத் தேடும் மீட்புக் குழு
Indonesian rescue crews searching for 140 people: 140 பேரைத் தேடும் இந்தோனேசிய மீட்புக் குழுவினர்.
ஜாவா கடலில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட பயணிகள் படகில் இருந்த 140 பேரைத் தேடும் பணியில் இந்தோனேசிய மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.

தொடர்புடையக் கப்பலில் இருந்த மற்ற 103 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் மரணமடைந்ததாகத் தேடல் மற்றும் மீட்புப் பணி முகமையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 240 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு ஒன்று ஜாவா கடலில் மோசமான வானிலையில் சிக்கி தொடர்பை இழந்து காணாமல் போனதாக அந்நாட்டின் தேடல் மற்றும் மீட்பு முகமை தெரிவித்திருந்தது.
விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 (Virgo Transport 8) கப்பல் சனிக்கிழமையன்று கிழக்கு ஜாவாவின் சுரபாயா நகரிலிருந்து தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் நகருக்குப் புறப்பட்ட நிலையில், அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பல்வேறு கப்பல்களைப் பயன்படுத்தி 103 பேர் மீட்கப்பட்டதாகவும்; அவர்களில் சிலர் கிழக்கு ஜாவாவில் உள்ள ஒரு துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதும், அதிகாரிகள் தரப்பு ஒரு மீட்புக் குழுவினர் குழு, கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டரை அப்பயணிகள் கப்பல் கடைசியாக இருந்த இடத்திற்கு அனுப்பி தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
போர்னியோ தீவில் அமைந்துள்ள தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் நகரில் உள்ள தேடல் மற்றும் மீட்புப் பிரிவு அலுவலகம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் 'விர்கோ டிரான்ஸ்போர்ட் 8' (Virgo Transport 8) உடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இது குறித்த தகவலைப் பெற்றதாகத் தெரிவித்தது. தற்போது எஞ்சிய 140 பேர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.