இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 268 ஆக உயர்வு!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் 5.6 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது.
சியாஞ்சூர் நகரில் 10 கி.மீ ஆழத்தில் நேற்று இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கிய நிலையில், மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்கள் மற்றும் திறந்தவெளி பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
#Earthquake (#gempa) possibly felt 49 sec ago in #Indonesia. Felt it? Tell us via:
— EMSC (@LastQuake) November 21, 2022
?https://t.co/LBaVNdVFgz
?https://t.co/AXvOM7qtuH
?https://t.co/wPtMW5w1CT
⚠ Automatic crowdsourced detection, not seismically verified yet. More info soon! pic.twitter.com/NKVXnD4mJG
பாதிப்புகள்
இந்த நிலநடுக்கத்தில் நகரத்தின் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதை தொடர்ந்து, இதுவரை 268 பேர் மொத்தமாக இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது.
அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் 151 பேர் வரை மாயமாகி உள்ளனர் என்றும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி குழந்தைகள் பலி
"We are racing against time."
— DW News (@dwnews) November 22, 2022
Rescuers in Indonesia are sometimes using their bare hands to search for quake survivors in flattened buildings.
At least 268 people have been killed, many of whom were public school students, authorities say.
More: https://t.co/nJXDiJwIIt pic.twitter.com/bG1kFQ9ZA4
இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பெருமளவு குழந்தைகளே பலியாகியுள்ளனர்.
அவர்களில் பலர் பள்ளி குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது, நிலநடுக்கத்தில் 2,200 வீடுகள் வரை சேதமடைந்து இருப்பதுடன் 5,300 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என இந்தோனேசிய தேசிய பேரிடர் பாதுகாப்பு மீட்பு கழகம் தெரிவித்துள்ளது.