வெளிநாட்டு இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை கோரிக்கை விடுத்துள்ள IndUS Canada Forum
வெளிநாட்டு இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 79 இந்திய அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி, IndUS Canada Forum அமைப்பானது, இந்திய அரசிடம் வெளிநாட்டு இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அமைப்பின் தலைவர் விக்ரம் பாஜ்வா, இரட்டை குடியுரிமை என்பது வெறும் நிர்வாக மாற்றம் அல்ல, இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை உயர்த்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் எனக் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருவதாக வெளிநாட்டு அமைச்சகத்தின் தரவுகளை அவர் மேற்கோள் காட்டினார்.

இவர்களின் நிதி வலிமை, தொழில்முறை திறன்கள், உலகளாவிய செல்வாக்கு ஆகியவற்றை இந்தியா முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இஸ்ரேல், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஏற்கனவே இரட்டை குடியுரிமையை வழங்கி, தங்கள் பொருளாதார மற்றும் தூதரக வலிமையை விரிவாக்கியுள்ளன.
“இந்த நாடுகள் தங்கள் புலம்பெயர் மக்களை தேசிய வளர்ச்சிக்காக பயன்படுத்துகின்றன; இந்தியா ஏன் OCI (Overseas Citizen of India) விசா மட்டுமே வழங்கி தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்?” என பாஜ்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் சமீபத்திய வரி உயர்வுகள் மற்றும் புவிசார் பதற்றங்கள் காரணமாக இந்திய வம்சாவளி தொழில்முனைவோர் சிக்கலில் உள்ளனர்.
இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டால், அவர்கள் இந்தியாவில் நீண்டகால முதலீடுகளைச் செய்யும் நம்பிக்கையும் பாதுகாப்பும் கிடைக்கும்.
கனடாவில், குறிப்பாக பஞ்சாப் வம்சாவளி இந்தியர்களை பாதிக்கும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு இது தீர்வாக இருக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இரட்டை குடியுரிமை இந்தியாவின் பொருளாதாரம், கலாச்சாரம், தூதரகம் ஆகியவற்றை உலகளவில் வலுப்படுத்தும் என்றும், சுற்றுலா, தானதர்மம், சமூக முன்னேற்றம் ஆகியவை அதிகரிக்கும் என்றும் IndUS Canada Forum தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட கொள்கை அமைப்பாளர்கள் இந்த நீண்டகால கோரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
IndUS Canada Forum dual citizenship, Overseas Indians citizenship demand, NRI dual nationality India, Vikram Bajwa IndUS Forum news, India diaspora policy reform, OCI vs dual citizenship debate, Indian diaspora global influence, Punjab NRIs Canada citizenship, India foreign investment NRIs, Indian government diaspora rights