தென் ஆப்பிரிக்காவுக்கு மரண அடி கொடுத்த ஸ்மிருதி மந்தனா படை! மிரட்டலான வெற்றி
மகளிர் முத்தரப்பு டி20 தொடரில், இந்திய அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது.
முத்தரப்பு டி20 தொடர்
இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் முத்தரப்பு டி20 தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
பஃப்பாலோ பார்க் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பாடியது. கேப்டன் மந்தனா 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், ஹர்லீன் தியோல்(8), ஜெமிமா(0), தேவிகா(9) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
எனினும் தீப்தி சர்மா 33 ஓட்டங்களும், அமஞ்சோட் கவுர் 41 ஓட்டங்களும் விளாச இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீராங்கனைகள் சொற்ப ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி வெற்றி
கப் 22 ஓட்டங்களும், கேப்டன் சுனே லூஸ் 29 ஓட்டங்களும் எடுத்தனர். ட்ரையான் 26 ஓட்டங்கள் விளாசினார். ஆனால் தீப்தி சர்மாவின் சுழற்பந்து வீச்சில் எஞ்சிய விக்கெட்டுகள் வீழ்ந்ததால், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 120 ஓட்டங்களே எடுத்து தோல்வியடைந்தது.
பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை அமஞ்சோட் கவுர் பெற்றார். அடுத்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் மோதுகின்றன.