U19 உலகக்கிண்ணம்: அதிரடி காட்டிய திரிஷா..இலங்கை அணியை வீழ்த்திய இந்தியா
மகளிர் U19 உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
திரிஷா 49
கோலாலம்பூரில் நடந்த போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பாடியது. கோன்கடி திரிஷா 44 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் விளாசினார். மிதிலா 16 ஓட்டங்களும், ஜோஷிதா 14 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன்மூலம் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 118 ஓட்டங்கள் எடுத்தது. பிரமுதி மெத்சாரா, லிமன்சா மற்றும் அசேனி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இந்தியா வெற்றி
அடுத்து களமிறங்கிய இலங்கை அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய வீராங்கனைகள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 58 ஓட்டங்களே எடுத்தது.
இதன்மூலம் இந்திய அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிரட்டலாக வெற்றி பெற்றது. ஷப்னம், ஜோஷிதா மற்றும் ப்ரூனிகா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |