31 ஓட்டங்களுக்கு சுருண்ட அணி! U19 உலகக்கிண்ணப் போட்டியில்.,3வது ஓவரிலேயே இந்தியா வெற்றி
மகளிர் U19 உலகக்கிண்ணப் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது.
31 ஓட்டங்களுக்கு சுருண்ட மலேசியா
கோலாலம்பூரில் நடந்த மகளிர் U19 உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய மலேசிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 31 ஓட்டங்களுக்கு சுருண்டது.
எந்த வீராங்கனையும் இரட்டை இலக்க ஓட்டங்களை எட்டவில்லை. மேலும் 4 வீராங்கனைகள் ஓட்டங்கள் எடுக்காமல் டக்அவுட் ஆகினர்.
W W W 🌟
— Women’s CricZone (@WomensCricZone) January 21, 2025
Hat-trick on debut for Vaishnavi Sharma
(via Star Sports) | #U19WorldCuppic.twitter.com/5Um75L98kZ
வைஷ்ணவி ஷர்மா மிரட்டல்
இந்திய அணியின் தரப்பில் மிரட்டலாக பந்துவீசிய வைஷ்ணவி ஷர்மா (Vaishnavi Sharma) 5 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆயுஷி ஷுக்லா 3 விக்கெட்டுகளும், ஜோஷிதா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணி 2.5 ஓவர்களில் 32 ஓட்டங்கள் எடுத்து 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
கோன்கடி திரிஷா (Gongadi Trisha) 12 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 27 ஓட்டங்கள் விளாசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |