கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம்
லேபர் கட்சியின் மிகப்பெரிய தொழிற்சங்க நன்கொடையாளரின் தலைவர், சர் கெய்ர் ஸ்டார்மர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார்.
திசையறியாத நிலை
யுனைட் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரான ஷரோன் கிரஹாம், கெய்ர் ஸ்டார்மரை தோல்வியடைந்த பிரதமர் எனக் கடுமையாகத் தாக்கிப் பேசியதுடன், பிரித்தானியா தற்போது திசையறியாத நிலையில் விடப்பட்டிருப்பதாகவும் எச்சரித்தார்.

ஆனால், பிரதமர் ஸ்டாமரை மாற்றிவிட்டு அந்தப் பதவிக்கு வர விரும்புபவர்களுக்கு அவர் ஒரு எச்சரிக்கையையும் விடுத்தார். இதே கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாட்டின் அழிவுச் சுழற்சியை உடைக்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
பிரதமர் ஸ்டார்மருக்குப் பிறகு பொறுப்பேற்கவிருக்கும் முன்னணி வேட்பாளர்கள் எவருக்கும் ஆதரவளிக்க கிரஹாம் மறுத்துவிட்டார், மேலும் அரசாங்கம் அழிவின் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அங்கீகரிக்க மறுப்பு
அமைச்சர்கள் முதலீட்டிற்காகக் கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க வேண்டும், பெரும் பணக்காரர்கள் மீது சொத்து வரி விதிக்க வேண்டும், மற்றும் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து அதிக நிதியை பிரித்தானியாவின் ஆயுத உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குவதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தொழிற்சங்கத்திற்கும் கட்சியின் தலைமைக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வந்தபோதிலும், யுனைட் அமைப்பு இன்னமும் லெபர் கட்சியின் முக்கிய நன்கொடையாளர்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

கிரஹாம், பிரதமர் ஸ்டார்மர் மீது அடிக்கடி விமர்சனங்களை முன்வைத்து வருபவர். மேலும், 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக லேபர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அவர் அங்கீகரிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |