ரூ.6,299க்கு அசத்தல் அம்சங்களுடன் வெளிவரும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்: விலை, சிறப்பு அம்சங்கள்
பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8ஹெச்டி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8ஹெச்டி ஸ்மார்ட்போன்
ஹாங்காங்-கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8ஹெச்டி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் என்றாலும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8ஹெச்டி ஸ்மார்ட்போனில் பல அசத்தலான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் மற்றும் விலை
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8ஹெச்டி ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் HD+ சன்லைட் ரீடெபிள் Display கொடுக்கப்பட்டுள்ளது. UniSOC T606 ப்ராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.
5000mAh பேட்டரி, Type C சார்ஜிங் போர்ட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 13 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா, 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது.
6GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8ஹெச்டி ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. வரும் 13ம் திகதி விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ணங்களில் வெளியாகவுள்ளது.
இதன் விலை ரூ.6,299-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அத்துடன் குறிப்பிட்ட வங்கி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தினால் விற்பனை விலையில் மேலும் சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
infinix smart 8hd smartphone, smartphone, low budget smartphone, android 13, 5000mAh, infinix