ரூ.17,999க்கு 108 Mb கேமரா திறன் கொண்ட ஸ்மார்ட்போன்: Infinix Note 40 5G முழு விவரங்கள்
Infinix நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் Note 40 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன், மிகச் சிறந்த அம்சங்களை கொண்டிருந்தாலும், தொடக்க நிலை விலையில் கிடைக்கிறது.
சிறப்பம்சங்கள்
திரை
Infinix Note 40 5G 6.78 இன்ச் அகல AMOLED திரையைக் கொண்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருப்பதால், மிகவும் தடையற்ற மற்றும் கண்கவர் பார்வை அனுபவத்தை வழங்குகிறது.
கேமரா
இந்த போனின் முக்கிய அம்சம் 108 megapixel பின்புற கேமரா. இதன் மூலம், உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை எடுக்க முடியும்.
இதனுடன் இரண்டு கூடுதல் depth மற்றும் macro கேமராக்கள் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
செல்பி எடுப்பதற்காக 32 megapixel முன்பக்க கேமரா உள்ளது.
செயல்திறன்
Android 14 இயங்குதளத்தில் Infinix இன் XOS 14 ஸ்கின் உடன் MediaTek Dimensity 7020 Processor இந்த போனை இயக்குகிறது.
பற்றரி
5000mAh பற்றரி கொண்டிருப்பதால், Infinix Note 40 5G நீண்ட நேர பற்றரி திறனைக் கொண்டுள்ளது. மேலும், இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.
Infinix Note 40 5G Launched in India?? .
— Aryan Agrawal (@techaryan2610) June 21, 2024
Specs:-
• 6.78" FHD+ 120Hz Amoled Display
• 108MP+ 2MP+ 2MP Rear?
• 32MP Selfie?
• Dimensity 7020
• Android 14
• 5000mAh Battery with 33W Charging & 15W Wireless Charging#Infinix #InfinixNote40 #InfinixNote405G pic.twitter.com/YC806xCqC0
விலை மற்றும் கிடைக்கும் தன்மை
Infinix Note 40 5G ஒரே வேரியண்ட்டிலேயே வருகிறது. அதாவது, 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த மாடல் ₹19,999 (சுமார் $240) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அறிமுகப்படுத்தல் சலுகைகள் மற்றும் வங்கி சலுகைகள் மூலம் இதன் விலை ₹17,999 (சுமார் $215) வரை குறைக்கப்படலாம்.
Infinix Note 40 5G Obsidian Black மற்றும் Titan Gold என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. ஜூன் 26ம் தேதி முதல் Flipkart இணையதளத்தில் இதை வாங்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |