ஜனாதிபதி ட்ரம்பிற்கு நெருக்கமான பிரபலம் துப்பாக்கியால் சுட்டு படுகொலை
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் செல்வாக்கு மிக்க பிரபலமும் வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க், துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளார்.
அவர் நம்முடன் இல்லை
மாமனிதரான சார்லி கிர்க் இறந்துவிட்டார். அமெரிக்காவில் இளைஞர்களின் இதயத்தை சார்லியை விட வேறு யாரும் நன்றாகப் புரிந்து கொண்டதில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை.
அவர் அனைவராலும், குறிப்பாக நான், நேசிக்கப்பட்டுப் போற்றப்பட்டேன், தற்போது அவர் நம்முடன் இல்லை என ஜனாதிபதி ட்ரம்ப் தமது சமூக ஊடகபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில், பொலிசார் எந்த சந்தேக நபரையும் கைது செய்யவில்லை என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் தற்போது வெளியான காணொளிகளில், உட்டாவின் ஓரெமில் உள்ள வளாகத்தில் ஒரு பெரிய கூட்டத்தினரிடையே கிர்க் உரையாற்றுகிறார். திடீரென்று துப்பாக்கி வெடிப்பது போன்ற சத்தம் கேட்கிறது.
இளைஞர் அமைப்பு
உடனடியாக கிர்க் தமது கழுத்தைப் பிடித்தபடி கிர்க் கீழே விழுகிறார். இதனிடையே, சம்பவயிடத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிர்க் உருவாக்கியுள்ள Turning Point USA என்ற குழுவானது அமெரிக்காவின் மிகப்பெரிய கன்சர்வேட்டிவ் இளைஞர் அமைப்பாகும். நவம்பர் மாதத்தில் ட்ரம்பிற்கு ஆதரவாக இளம் வாக்காளர்களைத் திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தது.
நாடு முழுவதும் கல்லூரி வளாகங்களில் வலதுசாரி சிந்தனைகளை விதைக்க, அவர் முன்னெடுக்கும் நிகழ்வுகள் பொதுவாக அதிக கூட்டத்தை ஈர்த்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |