பிரபல YouTuber புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு: இளம்பெண் ஒருவரின் பகீர் வாக்குமூலம்
பிரேசில் நாட்டவரான பிரபல YouTuber ஒருவர் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து, அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
16 வயதேயான பெண்
26 வயதான குறித்த நபர் சம்பவத்தின் போது 16 வயதேயான பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாகவும், அப்போது அவர் போதை மருந்து பயன்படுத்தியதாகவும் தொடர்புடைய பெண் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
@instagram
இச்சம்பவம் அந்த பெண்ணின் சகோதரரின் குடியிருப்பில் நடந்ததாகவும், மாரடைப்பால் மரணமடைந்த அந்த YouTuber-ன் சடலத்தை தமது சகோதரரும் அவரது மனைவியும் சேர்ந்து புதைக்க உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
26 வயதான Carlos Medeiros என்பவரின் சடலமானது புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு 16 வயது சிறுமி தமது தந்தையுடன் சென்று விசாரணை அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
@globo
டிசம்பர் 24ம் திகதி தமது சகோதரரின் குடியிருப்பின் குளியலறையில் அந்த YouTuber மற்றும் தாம் நெருக்கமாக இருந்ததாகவும், அப்போது அவர் போதை மருந்து பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலுதவி அளித்தும் பலனில்லாமல்
இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் அவளும் அவளது சகோதரனும் அவள் மைத்துனியும் அவனை கொல்லைப்புறத்தில் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாரடைப்பால் சுயநினைவின்றி சரிந்த அந்த நபருக்கு முதலுதவி அளித்தும் பலனில்லாமல் போனது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, விசாரணைக்கு பின்னர் குறித்த 16 வயது பெண் விடுவிக்கப்பட்டாலும், அவரது சகோதரர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பொலிஸ் காவலில் உள்ளனர்.
@globo
Carlos Medeiros போதை மருந்து பயன்படுத்தினாரா, அதனால் ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தாரா என்பது தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகும் வரையில் அதிகாரிகள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கைதாகியுள்ள நபரின் குடியிருப்புக்கு விருந்துக்கு சென்றுள்ளார் Carlos Medeiros. ஆனால் டிசம்பர் 25ம் திகதியும் அவர் குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தினர் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர். இதன் பின்னர் ஒருவார காலம் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், சடலமாக மீட்கபப்ட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |