மதுரை தனிஷ்க் நகை கொள்ளை; இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி கைது
instagram influncer meenatchi arrested in madurai tanishq gold theft: மதுரை தனிஷ்க் நகைக்கடையில், 11 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை தனிஷ்க் நகை கொள்ளை
மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியில், இரு வாரங்களுக்கு முன்னால் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான Tanishq நகைக்கடை திறக்கப்பட்டது.

இதில், கடந்த நவம்பர் 12 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் கடையில் இருந்த சுமார் 11 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 9 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
விசாரணையில் கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் தனி ஒரு நபராக இளைஞர் ஒருவர் உடல் முழுவதிலும் கருப்பு துணியால் மூடி, முகமுடி அணிந்தவாறு லிப்ட் பணிகள் நடைபெற்றபடி இருந்த கதவை கைகளால் திறந்து லிப்ட் பணிக்காக போடப்பட்ட கயிறு வழியாக தரைத்தளத்திற்குள் உள்ள கடைக்குள் இறங்கிசென்று கொள்ளையடித்து சென்றது தெரிய வந்துள்ளது.
மேலும், அந்த நபர் சில நாட்களுக்கு முன்னர் கடைக்கு வந்து நோட்டமிட்டு சென்றதும் சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளில் உள்ளது.
இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி கைது
கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள நிஷாந்த் என்ற இளைஞர் ஒருவரின் வீட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் கடந்த 12 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள நிஷாந்த்தின் குடும்பத்திற்கு சொந்தமான வயல்வெளி பகுதிக்கு நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு ஆட்டோவில் வந்து கட்டைப்பையில் துணியை எடுத்துவந்து எரித்துவிட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிஷாந்த்தின் தந்தை சுரேஷ் மற்றும் இன்ஸ்டாகிராம் influencer மீனாட்சி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து சுமார் 6 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவாகியுள்ள நிஷாந்தை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.