தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரோகித் உட்பட இந்திய அணியின் 5 நட்சத்திர வீரர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்
அவுஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறியதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய அணியின் 5 நட்சத்திர வீரர்கள் குறித்து முக்கய தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்களான ரோகித் சர்மா, ஷூப்மன் கில், பரித்வி ஷா, ரிஷப் பந்த் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் புத்தாண்டு அன்று கொரோனா விதிமுறைகளை மீறியது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து இந்த ஐந்து வீரர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், இதுகுறிவத்து விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய-இந்திய இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ம் தேதி சிட்னியில் தொடங்கவுள்ள நிலையில், இந்த 5 வீரர்களுகம் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி இந்திய ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டிக்காக தனிமைப்படுத்தலில் உள்ள இந்திய அணி வீரர்களான ரோகித் சர்மா, ஷூப்மன் கில், பரித்வி ஷா, ரஷப் பந்த் மற்றம் நவ்தீப் சைனி ஆகியோர் திங்களன்று மற்ற இந்திய அணியினருடன் தனிவிமானத்தில் சிட்னிக்கு பயணம் மேற்கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அவர்கன் ஐந்து பேரும் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என கூறப்படுகிறது.