வெளிநாட்டில் பிறந்து சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை தொடர்பில் ஒரு செய்தி
சுவிஸ் நகரமான சூரிச்சில், வெளிநாட்டில் பிறந்து சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை வழங்குவது (naturalisation) தொடர்பாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அதன்படி, சுவிஸ் நகரமான சூரிச்சில் வாழும் வெளிநாட்டில் பிறந்தவர்களில் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இனி சுவிஸ் குடியுரிமை பெற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியதில்லை.
இதற்கு முன்பு வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை பெற 250 சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
வெளிநாட்டில் பிறந்தவர்கள் சுவிஸ் குடியுரிமை பெற கட்டணம் செலுத்தவேண்டியதில்லை என்ற இந்த விதி உடனடியாக அமுலுக்கு வருகிறது.
வெளி நாட்டில் பிறந்து சூரிச்சில் வாழும் மக்கள் குடியுரிமை பெறும் செயல்முறையை முழுமை செய்வதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.