அரசு வேலையை விட்டு சொந்த தொழில் தொடங்கியவர்.. இன்று ரூ.6,17,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்துக்கு அதிபதி
அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த தொழில் தொடங்கி பல லட்சம் கோடிக்கு அதிபதியாக இருக்கும் ஒருவரை பற்றி தான் பார்க்க போகிறோம்.
யார் இவர்?
இன்போசிஸ் இணை நிறுவனராக இருப்பவர் தான் கே.தினேஷ். இவர் முதுநிலை கணித பட்டப்படிப்பு முடித்துள்ளார். மேலும், 2006 -ம் ஆண்டில் கர்நாடகா மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் டாக்டரேட் பட்டம் முடித்துள்ளார்.
இவர் பெங்களூரில் அரசுக்கு சொந்தமான எலக்ட்ரிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அந்த வேலையை விட்டு 1981 -ம் ஆண்டு கேஆர் நாராயணமூர்த்தி மற்றும் இன்னும் சிலருடன் இணைந்து சொந்தமாக தொழில் தொடங்கினார்.
Infosys நிறுவனத்தின் 7 இணை இயக்குநர்களில் 69 வயதுடைய K Dinesh முக்கிய பங்கு வகித்தார். இவர், 30 ஆண்டுகளாக நிர்வாக போர்டில் உறுப்பினராகவும் பணியாற்றினார். இன்றைக்கு ரூ.6,17,000 கோடி மதிப்புள்ள இன்போசிஸ் இணை நிறுவனராக கே.தினேஷ் இருக்கிறார்.
நிகர சொத்து மதிப்பு
பின்னர், 2011 ம் ஆண்டில் போர்டில் இருந்து விலகி தினேஷும் அவரது மனைவி ஆஷாவும் சேர்ந்து ஆஷ்ரயா ஹாஸ்தா டிரஸ்ட் எனும் அறக்கட்டளயைத் தொடங்கினர்.
இந்த அறக்கட்டளையானது கல்வி, மருத்துவ உதவி, கால்நடை நலம், விவசாயத்துறை போன்றவற்றில் பல்வேறு அறப்பணிகளை செய்து வருகிறது. போர்ப்ஸ் கணிப்பின்படி தினேஷின் நிகர சொத்து மதிப்பு 2024 ஜனவரி 3 ம் திகட்டிபடி ரூ.19,800 கோடி ஆகும்.
மேலும், இவர் அவுஸ்திரேலியாவில் உள்ள Infosys Technologies தலைவராக பதவி வகித்தார். அங்கு Quality, Information Systems, Communication Design Group உள்பட பல்வேறு துறைகளை நிர்வகித்து வந்தார். ஓய்வு நேரத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து அறக்கட்டளையை கவனிக்கிறார்.
இவருக்கு திவ்யா, தீக்ஷா என இரு மகள்கள் உள்ளனர். இதில் வேதாஎர்த் என்ற மூலிகை சார்ந்த உடல்நலத் தயாரிப்புகள் நிறுவனத்தை திவ்யாவும், கார்ப்பொரேட் கவுன்சலிங் கம்பெனியை தீக்ஷாவும் நடத்தி வருகின்றனர். இந்த இரண்டுமே நல்ல லாபத்தில் இயங்குகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |