ரூ.8.30 லட்சம் கோடியை நன்கொடையாக அள்ளிக்கொடுத்த இந்திய தொழிலதிபர்.., யார் அந்த மனிதர்?
பல நல்ல காரியங்களுக்காக ரூ.8.30 லட்சம் கோடியை நன்கொடையாக கொடுத்த ஒரு இந்திய தொழிலதிபரை பற்றி தான் பார்க்க போகிறோம்.
யார் அவர்?
இந்திய மாநிலமான குஜராத்தின் ஜொராஸ்டிரியன் பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர் ஜாம்ஷெட்ஜி டாடா (jamsetji tata). இவரது குடும்பம் நிதிச்சுமையால் வறுமையால் வாடியது. இருந்தாலும் தனது குடும்பத்தின் பூசாரித்துவ பாரம்பரியத்தை உடைத்து Jamsetji Tata தான் தொழில் தொடங்கும் முதல் உறுப்பினர் ஆனார்.
ஹீராபோ டாபூ என்பவரை Jamsetji Tata திருமணம் செய்து டோராப்ஜி டாடா மற்றும் ரத்தன்ஜி டாடா என்ற இரு மகன்கள் பிறந்தனர். டாடா நிறுவனத்தின் நிறுவனர் தான் இந்த Jamsetji Tata. இவருக்கு பின்னர் மகன்கள் தான் வணிகத்தை நடத்துகின்றனர்.
ஓய்வு பெறும் வயதில் தொழில் தொடங்கியவர்.. விடா முயற்சியால் ரூ.23,000 கோடி சொத்துக்கு அதிபதியான வயதான கோடீஸ்வரர்
நன்கொடையாக ரூ.8.30 லட்சம் கோடி
1892 -ம் ஆண்டு முதல் Jamsetji Tata தனது அறப்பணியை தொடங்கி 1904 -ம் ஆண்டில் காலமானார். அவருக்கு பிறகு டாடா குரூப் தலைவரான ரத்தன் டாடா நன்கொடைகளை கவனித்து வருகிறார். குறிப்பாக, Jamsetji Tata தான் சம்பாதித்த ரூ.8,29,734 கோடியை பல நல்ல காரியங்களுக்காக தானம் செய்துள்ளார்.
ஈடெல் பவுண்டேஷன் மற்றும் ஹுருன் நிறுவனத்தின் அறிக்கையின்படி கடந்த நூற்றாண்டில் மிகப் பெரிய நன்கொடையாளராக Jamsetji Tata இருந்துள்ளார். இரண்டாம் இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளார்.
முக்கியமாக கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக தனது பெரும்பாலான நன்கொடைகளை ஜாம்ஷெட்ஜி டாடா கொடுத்துள்ளார்.
இவரை தவிர டாப் 50 உலகளாவிய நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்தியர் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி. இவர் சுமார் 22 பில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |