ஓய்வு பெறும் வயதில் தொழில் தொடங்கியவர்.. விடா முயற்சியால் ரூ.23,000 கோடி சொத்துக்கு அதிபதியான வயதான கோடீஸ்வரர்
ஓய்வு பெரும் வயதில் தொழில் தொடங்கி வயதான கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை ஒருவர் பெற்றுள்ளார்.
யார் அவர்?
இந்திய தலைநகர் டெல்லியில் பிறந்தவர் லட்சுமன் தாஸ் மிட்டல் (Lakshman Das Mittal). இவர் பள்ளி படிப்பை முடித்ததும் அரசு கல்லூரியில் பட்டம் பெற்றார்.
இதன் பின்னர், உருது மற்றும் ஆங்கிலத்தில் முதுகலை படிப்பை மேற்கொண்டார். மேலும், எம்.ஏ ஆங்கிலத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதனையடுத்து, தனது வாழ்க்கை பயணத்தை கடந்த 1955 -ம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி முகவராக தொடங்கினார். அதில் வரும் சம்பளத்தை வைத்து மாதம் தோறும் சேமிக்கவும் தொடங்கினர்.
முக்கியமாக இவர், எல்.ஐ.சி முகவராக இருந்தாலும் தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்ற ஆசை இவரை விடவில்லை.
வயதான கோடீஸ்வரர்
ஓய்வு பெற்ற Lakshman Das Mittal, 1996 -ம் ஆண்டு விவசாயத் தொழில்களுக்கான டிராக்டர்களைத் தயாரிக்க நினைத்தார். பின்பு, சோனாலிகா டிராக்டர் நிறுவனத்தை தொடங்கினார். அதற்கு தன்னுடைய ஓய்வு பணம் முழுவதையும் முதலீடு செய்தார்.
ஆரம்பத்தில் பல நஷ்டங்களை சந்தித்த போதிலும் இவர் பின்வாங்கவில்லை. இதனால் தான், பஞ்சாபின் ஹோஷியார்பூரில் பெரிய டிராக்டர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை வெற்றிக்கரமாக நடத்தி வருகிறார்.
இதனை தவிர சோனாலிகா குழுமம் 5 நாடுகளில் 5 ஆலைகளை கொண்டுள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் வணிகமானது 120 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது Lakshman Das Mittal -ன் சொத்து மதிப்பானது 92 வயதில் ரூ.23,000 கோடியாக உள்ளது.
மேலும், இந்நிறுவனம் இந்தியாவில் 3 -வது பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனமாகும். இங்கு ஆண்டுக்கு 3 லட்சம் டிராக்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 92 வயதில் இந்தியாவில் வாழும் மிக வயதான கோடீஸ்வரர்களின் பட்டியலில் லட்சுமன் தாஸ் மிட்டல் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |